ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 19, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     .பி. ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்துள்ளார் என்பதையும் அதில் குற்றம் சாட்டப்பட்ட உயர்ஜாதியைச் சேர்ந்த நான்கு பேரும் இந்த கொடுமைக்கு காரணமானவர்கள் என்பதையும் சி.பி.அய். உறுதி செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதற்கான தீர்வு புத்தாண்டில் கிடைத்திட வாய்ப்பு உள்ளது என மத்திய விவசாய அமைச்சர் தோமர் கூறியுள்ளார்.

·     வேளாண் சட்டங்களை ரத்து செய்திட வேண்டும் என்று டில்லி அருகே போராடும் விவசாயிகள், குடியரசு தினத்தில் டிராக்டர் ஊர்வலம் நடத்திட முடிவு எடுத்துள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     அரியானா மாநில பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சவுத்ரி பீரேந்திர சிங், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இது அனைவரின் போராட்டம். நான் அவர்கள் பக்கம் நிற்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

·     மகாராட்டிரா அரசின் ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என மகாராட்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

·     புனித நூல் இல்லாமல் படியுங்கள் என்ற தலைப்பிட்டு, நீண்ட காலமாக, இந்திய ஆங்கில இலக்கிய நிறுவனங்கள் ஒரு நகர்ப்புற, பெருநகர கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது, அதை பிராமணியமாக மட்டுமே அழைக்க முடியும் என எழுத்தாளர் சுமனா ராய் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

·     பிரதமர் ஒரு கட்சியின் தலைவர் போல் பேசுகிறார். தற்போது நெல்லுக்கு குறைந்த ஆதார விலை ரூ.1870-க்கு பதிலாக ரூ.900 தான் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது என அகில இந்திய கிசான் சங்கர்ஸ் கூட்டமைப்பின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நியூ இந்திய எக்ஸ்பிரஸ்:

·     விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை புதிய வேளாண் சட்டம் உறுதிப்படுத்துகிறது என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு பாரதீய கிசான் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. .பி.யில் விவசாயிகளுக்கு அவ்வாறு கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

·     வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச் சேரியில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் கலந்து கொண்ட புதுவை முதல்வர் வே. நாராயணசாமி, சட்டத்தின் நகலை கிழித்தெறிந்தார்.

தி டெலிகிராப்:

·     மகாத்மா காந்தி: கடைசி கட்டம் என்ற தனது புத்தகத்தில், காந்தியின் கடைசி செயலாளர் பியரேலால், 1947 இல் இந்தியா வின் பிரிவினையும் அதனுடன் ஏற்பட்ட கொடூரமான வன் முறையும்இந்து பேரினவாதத்திற்கு" மிகப்பெரிய வாய்ப்பை  அளித்ததாக எழுதுகிறார். அதன் மிக தீவிரமான வெளிப்பாடு என்பது ஆர்.எஸ்.எஸ்.,  இந்து நடுத்தர வர்க்கம் மற்றும் அரசு சேவைகளில் ஊடுருவல் என்பதாகும்.  இது இந்து காங்கிரஸ் காரர்களில் ஒரு பகுதியினரின் ரகசிய அனுதாபத்திற்குக் கட்டளையிடத் தொடங்கியது.  என்பதை வரலாற்றாசிரியர் ராமசந்திர குகா குறிப்பிட்டுள்ளார்.

குடந்தை கருணா

19.12.2020

No comments:

Post a Comment