தமிழில் அரசாணை வெளியிட கோரி வழக்கு: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 18, 2020

தமிழில் அரசாணை வெளியிட கோரி வழக்கு: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை,டிச.18, தமிழ்நாட்டில் அரசா ணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் ஆகிய வற்றைத் தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் முதல் மொழியாக தமிழ், இரண்டாம் மொழியாக ஆங்கிலம் என இரட்டை மொழி கொள்கை பின்பற்றப் பட்டுவரும் நிலையில், தொன்மையான தமிழ் மொழி அரசு அலுவலர்களால் புறக்கணிக் கப்படுகிறது.

அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் ஆகியவை ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டு சம்பந்தப் பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன. சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தமிழில் தயாரிக்கப் பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிலையில், அதே நடைமுறையை அரசா ணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் ஆகிய வற்றைத் தயாரிக்கும்போது பின்பற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.அதேபோல், நீதி மன்ற உத்தரவுப்படி காவல் துறையினரால் கடிதங்கள் தமிழில் அனுப்பப்பட்டு வரு கின்றன.

அரசாணைகளை தமிழில் வெளியிட வேண்டும் எனக்கோரி நான் தமிழ்நாடு அரசுக்கு மனு அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது இந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்எனத் தெரிவித்திருந் தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அடங் கிய அமர்வு, இதுதொடர்பாக மார்ச் 29ஆம் தேதிக்குள் தமிழ்நாடு தலைமைச் செயலர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment