பட்டுக்கோட்டை, ஜன.4, அண்மை யில் மறைவுற்ற பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழக துணைத் தலைவர் ஓய்வுபெற்ற தலைமையா சிரியர் சுயமரியாதைச் சுடரொளி கே.சுப்ராயலு படத்திறப்பு நிகழ்வு 20.-12.-2020 ஞாயிறு அன்று மதியம் 12 மணிக்கு பட்டுக்கோட்டை அவரது இல்லத்தில் நடைபெற்றது
மாவட்டத்
தலைவர் பெ.வீரை யன்
தலைமை வகித்து நினைவு ரையாற்றினார்.
மாவட்டச்
செயலாளர் வை. சிதம்பரம், பொதுக்குழு உறுப்பி னர் அரு. நல்லத்தம்பி, மாவட்ட துணைத்தலைவர் ச.சின்னக் கண்ணு,
ஒன்றியத்தலைவர் வீர மணி, ஒன்றிய செயலாளர் ஏனாதி ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை யேற்று நினைவுரையாற்றினர்
சுயமரியாதை
சுடரொளி கே.சுப்ராயலு படத்தினை
திறந்து வைத்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் நினைவுரையாற்றினார்
மறைந்தும்
மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள அய்யா கே.சுப்ராயலு அவர்கள்
ஆசிரியர் பணியாற்றியபோது பல மாணவர்களை பகுத்தறிவு
சிந்த னையின்பால் ஈர்த்தவர்
பணி
ஓய்வுக்கு பின் திராவிடர் கழகத்தில் பொறுப்பேற்று செயல் பட்டவர். பட்டுக்கோட்டையில் கழகத்திற்கு புரவலராக விளங் கினார். தொடர்ந்த விடுதலை வாசகர், உடல் நலம் குன்றிய அய்யா அவர்களை நவம்பர் 16ஆம் தேதி வருகை தந்து பார்த்தோம், தோழர்கள் இவ்வளது பேர் வந்துள்ளீர்கள் என்ன பணி என்று கேட்டார். தங்களை பார்க்க தான் என்று தெரிவித்தோம் அய்யா அவர்கள் நம்பவில்லை. தனது மகன் ஆனந்தை அழைத்து விசா ரித்து நாங்கள் விடுதலை சந்தா வசூல் பணியில் உள்ளதை தெரிந்து கொண்டு உடல்நலிந்த நிலையிலும் விடுதலை சந்தாவை வழங்கியது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது
அவர்
மறைவு அவர் குடும்பத் திற்கு மட்டும் அல்ல இயக்கத்திற்கும் பேரிழப்பு ஆகும்.
மனிதன்
தானாகவும் பிறக்கவில்லை அதனால் அவன் தனக்காக மட்டும் வாழக்கூடாது என்றார் பெரியார். அதற்கு எடுத்து காட்டாக தன் இறுதிமூச்சடங் கும்வரை சமுதாய பணியாற்றியவர் சுப்ராயலு அய்யா அவர்கள். பெரியார் தொண்டர்கள் சமுதாய விஞ்ஞானிகள் என்றார் பெரியார். விங்ஞானிகள் தோன்றுவது அஞ்து. அவருடைய இழப்பு அவர் கள் குடும்பத்திற்கு மட்டுமான இழப்பு அல்ல, உலக மக்களுக்கான இழப்பு. அதேபோல் சமுதாய விஞ்ஞானியான பெரியார் தொண்டர் இழப்பு இந்த சமுதாயத்திற்கான இழப்பாகும், திராவிடர் கழக தோழர்களிடம் அய்யா சுப்ராயலு எந்த அளவிற்கு அன்பை பொழி வாரோ அதற்கு கொஞ்சமும் குறை வில்லாமல் அவரது மகன் ஆனந்த் மற்றும் குடும்பத்தாரும் திகழ்வது சிறப்புக்குரியது. அய்யா எந்த கொள்கையை மக்களிடம் சொன் னார்களோ அந்த கொள்கைப் படி எந்த மூட சடங்கும் இல்லாமல் படத்திறப்பு நடத்துவது அவருக்கு செய்யும் மரியாதையாகும். அய்யா மறைந்தாலும் எப்போதும் திரா விடர் கழகம் இந்த குடும்பத்தோடு தொடர்பில் இருக்கும்.
மறைந்த
அய்யா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவிப்பதுடன் அவர் மறைவால் வாடும் உறவி னர்கள், நண்பர்கள், கழகத் தோழர் களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து நினைவுரையாற்றினார்
தோழர்கள்
நினைவுரை
ஓய்வு
பெற்ற வங்கி மேலாளர் ஜெயக்குமார், மருத்துவர் மகாலிங் கம், ஒன்றியத் துணைதலைவர் காளிதாதாசன்,மாவட்ட வழக் குரைஞரணி அமைப்பாளர் அ. அண்ணாத்துரை ஆகியோர்
நினைவுரையாற்றினர்.
பொதுக்குழு
உறுப்பினர் இரா.நீலகண்டன், மாவட்ட அமைப் பாளர் சோம. நீலகண்டன், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து. துரைராஜ், பட்டுக்கோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், அமைப்பாளர் முகிலன், மாவட்ட மாணவர் கழக தலைவர் சே. இங்கர்சால், வளர்மதி சேகர், மாவட்ட ப.க செயலாளர்
வள்ளு வப்பெரியார்,மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் நடரா சன், மதுக்கர் ஒன்றிய அமைப்பா ளர்நா.வை.இராதாகிருஷ்ணன், மதுக்கூர் ஒன்றிய
துணைத்தலைவர் சரவணன், சேது ஒன்றியத் தலைவர் ஜெகநாதன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் அ.பாலசுப்ரமணி யன்,
பள்ளத்தூர் சண்முகவடிவேல், பேரா ஒன்றிய இளைஞரணி செய லாளர் செ.கவுதமன், பேரா
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சி.விசி, கவிஞர்
வீர.முருகேசன், பேராசிரியர் தமிழன்பன் உள் ளிட்ட நண்பர்களும், உறவினர்கள் கழகத் தோழர்களும் ஏராளமா னோர் கலந்துகொண்டு சிறப்பித் தனர்.
இறுதியாக
சுப்ராயலு அவர் களின் சகோதரர் காஞ்சிபுரம் மாவட்ட ப.க பொறுப்பாளர்
துரைராசு நன்றி கூறினார்.
சுப்ராயலு
அவர்களின் மகள்ஆனந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து உபசரித்தார்
உடல்நலம்
பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து தனது இல்லத்தில் ஓய்வில் உள்ள பட்டுக் கோட்டை நகரத் தலைவர் சிற்பி சேகர் தொலைபேசியில் அனைவரி டமும் தொடர்பு கொண்டு ஒருங் கிணைத்தார்.

No comments:
Post a Comment