இராமநாதபுரம் மாவட்டம், பெரியார் பெருந்தொண்டர் டி.தங்கவேல் (வயது 85) அவர்கள் 23.2.2021 அன்று இரவு 9 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தில் காலமானார். அரசுத்துறையில் பணியாற்றிய அவர் மாவட்டத்தில் இதுவரை நடந்த கழக ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், மாநாடுகள் இவற்றில் தவறாமல் பங்கேற்றவர். மறைவு செய்தியை அறிந்ததும் அவருடைய இல்லத்திற்கு மாவட்ட தலைவர் எம்.முருகேசன், செயலாளர் கோ.வ.அண்ணாரவி, காஞ்சிரங்குடி கார்மேகம், ஒன்றிய செயலாளர் இரா.காமராசு, கடலாடி ஒன்றிய தலைவர் குரு.விஜயகாந்த் ஆகிய தோழர்கள் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
-

No comments:
Post a Comment