சென்னை,
மே 19 உங்கள்
தொகுதியில் முதல்வர் துறை தொடங்கப்பட்ட 10 நாட்களில் மனுதாரர்களுக்கு அதற் கான பயன்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வர்
மு.க.ஸ்டாலின் தேர்
தல் பிரச்சாரத்தின் போது, உங் கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வுகாணும் வகையில், உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். அவ ரிடம் கடந்த
மே 9ஆம் தேதி அனைத்து மனுக்களையும் முதல் வர் ஒப்படைத்தார். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 72 மரப் பெட்டிகள் மற்றும் 275 அட்டைப் பெட்டிகளில் 4 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட
மனுக்கள் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக் கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை 70 ஆயிரம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும் பதிவேற்றப்பட்டதுடன் அடையாள எண் வழங்கப்பட்டு, அதுகுறித்த குறுஞ்செய்தி மனு தாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப் பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண் மைத் தன்மைக்கேற்ப தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வுக் குப்
பிறகு உடனடி தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொள் கின்றனர்.
இதுவரை
சென்னை, திரு வள்ளூர், ராணிப் பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய 6 மாவட் டங்களில் இருந்து பெறப்பட்ட 549 மனுக்கள் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கியதை குறிக்கும் வகையில் 10 பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்
நேற்று (18.5.2021) வழங்கினார்.

No comments:
Post a Comment