பெங்களூரு, மே 19 பெங்களூருவில் கரோனா தொற்றுக்கு ஆளான 179 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 54 பேருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து
கருநாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் 18.5.2021 செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கருநாடகாவில்
கரோனா வைரஸ் தொற்றின் 2ஆவது அலையை கட்டுப் படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த நோய் எதனால் பரவுகிறது, எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பதை கண்டறிய மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உரிய முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூருவில்
179 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 8 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள 52 பேரிடம் பேசினேன். கருப்பு பூஞ்சை நோய் தாக்கப் பட்டதில் 54 பேருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. 14 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை களில் இருந்து பெறப்பட்ட தகவல் கள் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.
தீவிர
கரோனா தொற்று, ஆக்சிஜன் குறைபாடு, அதிகளவில் ஸ்டீராய்டு, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் கரோனா நோயாளிகளை இந்நோய் எளிதில் தாக்குகிறது. ஹெச்.அய்.வி., புற்று நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட வர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயா ளிக்கு 40 முதல் 60 ஆம்ப்போட்ரிசின் மருந்து தேவைப்படு கிறது. எனவே கருநாடகாவுக்கு 20 ஆயிரம் குப்பி களை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதுவரை 450 குப்பிகள் மட்டுமே வந்துள்ளன.
இவ்வாறு
சுதாகர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment