ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், கேரளாவில் இடதுசாரி கட்சிகள் பெற்றுள்ள வெற்றி, 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டாட்சிக்கு வலு சேர்க்கும் அணியை உருவாக்க வழிவகுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

·     டில்லி மாநிலத்திற்கு உரிய ஆக்சிஜன் தேவையை மத்திய அரசு தரவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி நீதிமன்றம் மத்திய அரசை எச்சரித்துள்ளது.

·     மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் பெற்ற பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தேசிய அளவில் பா...வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைக்க வேண்டும் என பத்திரிக்கையாளர் நிலன்ஞன் மகோபாத்யாயா குறிப்பிட்டுள்ளார்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     கரோனா தடுப்புப்பணியில் ஊடகத்தைச் சேர்ந்தவர்களும் முன்களப் பணியாளர்கள் என முதல்வராக பதவி ஏற்க இருக்கும் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     சுகாதார கட்டமைப்பில் பீகார், .பி. , மத்திய பிரதேசத்தைவிட மோசமான நிலையில் குஜராத் உள்ளது என எழுத்தாளர் கிறிஸ்டபி ஜாப்ரலெட் மற்றும் சரிக் லாலிவாலா கூட்டாக கட்டுரையில் பதிவிட்டுள்ளார்கள்.

- குடந்தை கருணா

5.5.2021

No comments:

Post a Comment