டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· பிளஸ் 2 தேர்வுகள் நிச்சயமாக நடைபெறும். நல்ல கல்வியைப் பெற்று பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· மத்திய அரசும், சில மாநில அரசுகளும் கரோனா இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் ஒவ்வொரு மாநிலமும் எத்தனை இறப்புச் சான்றிதழ் அளித்துள்ளது என்ற விவரத்தைப் பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தி டெலிகிராப்:
· மோடி அரசு துவக்கியுள்ள புதிய நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் வீடு திட்டத்தை உடன் நிறுத்திட ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
- குடந்தை கருணா
16.5.2021
No comments:
Post a Comment