உ.பி. பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒப்புதல் வாக்குமூலம் கரோனா பற்றி பேசினாலே தேசத்துரோகச் சட்டம் பாய்ந்து விடும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 20, 2021

உ.பி. பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒப்புதல் வாக்குமூலம் கரோனா பற்றி பேசினாலே தேசத்துரோகச் சட்டம் பாய்ந்து விடும்

 லக்னோ, மே 20 ஆதித்யநாத் தலைமையிலான .பி. பாஜக ஆட்சியில், கரோனாபற்றி யார் பேசினாலும், அவர்கள் மீது தேசத்துரோகச் சட்டம் பாய்ந்து விடும்; பாஜக சட்டமன்ற உறுப்பினர்களாகவே இருந்தாலும் அதுதான் நிலைமை என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே கண்ணீர் விட்டுள்ளார்.

.பி. மாநிலம் சீதாபூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ராகேஷ் ரத்தோர். இவர்தான், ‘.பி. மாநிலத்தில் நிகழும் கரோனா அவலங்கள் குறித்து பேச முடியாத நிலைதங்களுக்கு உள்ளதுஎன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

.பி. மாநிலத்தில், எந்த சட்டமன்ற உறுப்பினராவது அவர் தங்கள் கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இல்லை. எல்லாம் நன்றாக இருக்கிறது என்று மட்டுமே அவர் கூற முடியும்; அரசு கூறுவதைத்தான் கூற வேண்டும்; அதைத்தாண்டி கூடுதலாக ஏதாவது பேசிவிட்டால் என் மீதும் துரோகி என்று முத்திரை குத்தப்படும்; தேசத் துரோக செயல்கள் தடுப்புச் சட்டம் பாயும்என்றும் ராகேஷ் ரத்தோர் கொதித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களான தங்களுக்கு ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சியில் எந்த மதிப்பும் இல்லை என்றும் கண்ணீர் விட்டுள்ளார். .பி. முதல்வர் ஆதித்யநாத், கரோனாவை எதிர்கொள்ளும் விஷயத் தில், சட்டமன்ற உறுப்பினர் ராம்கோபால் லோதி, மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், ராகேஷ் ரத்தோர் என சொந்தக் கட்சியினரிடமே எதிர்ப்பை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment