காரைக்குடி,மே 5- காரைக்குடியில் செய்தியாளர்களிடம் மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டி வருமாறு,
தமிழ்நாட்டின் முதல்வ ராக பொறுப்பேற்று திறமை யான நிர்வாகத்தினை நடத் திட மு.க.ஸ்டாலின் அவர்க ளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். ஆனால் அவருக்கு முதல்வராகும் வாய்ப்பு அவரது ஜாதகத்தி லேயே இல்லை என்று சொன் னாரல்லவா? அவரது ஜாத கம் மாறியுள்ளதா?அல்லது ஜோசியர் மாறியிருக்கிறாரா? ஜாதகம் எப்படி மாறும்? அவர்தான் ஜோசியரை மாற்ற வேண்டும்.
மத்திய அரசின் அனைத்து விதமான பலத்தையும் எதிர்த்து தன்னந்தனியாக போராடி வென்று மேற்கு வங்கத்தில் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து கொண்ட மம்தாவுக்கும் எனது பாராட் டுகள்.
அசாமில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இல்லாத சூழ லில் இன்றைய இளம் தலை முறையினர் கடுமையாக பணி யாற்றி வலுவான எதிர்க்கட்சி யாக காங்கிரஸ் கட்சி உரு வெடுத்துள்ளது. கேரளா காங்கிரஸ் தோழர்கள் சோர் வடைந்து விடாமல் பணியாற் றினால் அடுத்த தேர்தலில் வெற்றி காத்திருக்கிறது. அங்கே மிக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் அதாவது 0.8 சதவீதத்தில்தான் காங்கிரஸ் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
தற்போதைய சூழலில் நாட்டின் மிக முக்கியமான 13 கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கரோனா தொற்றை எப்படி சமாளிக் கலாம் என்று ஆலோசனை கூறி பிரதமருக்கு கடிதம் எழு தியுள்ளனர். இந்த நடைமுறை தொடர்ந்து இயங்க வேண் டும் என்று விரும்புகிறேன் என்றார் அவர்.
No comments:
Post a Comment