மத்தியப் பிரதேசம் : கும்பமேளா சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கரோனா
போபால், மே. 5- மத்தியப் பிரதேசத் தில் இருந்து கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. இதற்கு முக்கிய காரணம் கும்பமேளா மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் எனக் கூறப்படுகிறது. ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் ஏரா ளமான கட்டுப்பாடு விதிக் கப்பட்டிருந்தாலும் அதை யாரும் கவனத்தில் கொள்ள வில்லை என்பதால் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த விழாவுக்கு நாடெங்கும் இருந்து பல லட்சக்கணக்கானோர் சென்றிருந்ததால் பரவல் மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்தது. அதை நிரூபிப்பது போல் தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் தொற்று பரவி வருகிறது. கும்பமேளா வில் கலந்துக் கொண்டு திரும்பி வருவோரில் சிலர் மட்டும் கொரோனா பரிசோ தனை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 99% பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இவர்கள் தற்போது தனிமையில் வைக் கப்ரீபட்டுள்ளனர். அதே வேளையில் கும்பமேளா சென்றுவிட்டு திரும்பியவர் கள் யார் யார் என எளிதாக கண்டறிய முடிவதில்லை என்பதால் இன்னும் எத்தனை பேர் கரோனா பாதிப்புடன் மாநிலத்தில் உள்ளனர் என் பதும் அவர்களிடம் இருந்து எத்தனை பேருக்கு கரோனா பரவும் என்பதும் அறியாத தால் கடும் அச்சம் நிலவுகிறது.
டில்லி நகரில் இருந்தும் ஏராளமானோர் கும்பமேளா சென்று திரும்பி வந்துள்ளனர். அங்கு சென்று திரும்பி வரு வோர் அனைவரும் 14 நாட் கள் தனிமையில் இஒருக்க வேண்டும் என்பது டிலியில் கட்டாயம் ஆக்கப்பட்டுள் ளது. இதே அச்சம் குஜராத் தில் நிலவுவதால் அங்கும் கும்பமேளா சென்று திரும் பியவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment