எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பார்ப்பனர் - பார்ப்பனரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பார்ப்பனர் - பார்ப்பனரே!

பார்ப்பனர்கள் எந்த உயர்ந்த பதவி வகித்தாலும், அவர்களின் எண்ணமெல்லாம் இடஒதுக்கீட்டில் கைவைப்பதில்தான் இருக்கும். குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாஇந்து' ஏட்டின் விழா ஒன்றில் பங்கேற்க சென்னை வந்தபோது (4.9.1978) இடஒதுக்கீடு பற்றி கருத்துத் தெரிவித்தார்.

"சமுதாயத்தில் செய்யப்படும் உதவிகள் வகுப்பு அடிப்டையில் இருக்கக் கூடாது. இந்த ஆபத்தான போக்கை ஏற்கெனவே நாம் மேற் கொண்டு விட்டோம் என்று சொல்லுவதற்கு வருத்தப்படுகிறேன். வறுமையின் அடிப்படையிலே எல்லோருக்கும் உதவிடவேண்டும். உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பதற்காக அவர்களை வறு மையில் விட்டு விடக்கூடாது" (‘தினமணி‘, 5.9.1978).

தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு - நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டு 9ஆவது அட்டவணையில் இடம் பெறச் செய்யப்பட்டது. அதில் கையொப்பம் போடும் இடத்தில் இருந்த குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா தெரிவித்த கருத்தென்ன?

Although the quota system might have  taken away posts from brahmins, no one could take away brahmin's brain (‘Indian Express', 25.9.1994) 

"இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிராமணர் களுக்கான இடங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிராமணர்களுக்கான மூளையை எடுத் துக் கொள்ள முடியுமா? என்று கேட்டவர்தான் இந்த நாட்டின் குடியரசுத் தலைவர். பதவியைவிட அவருடைய பார்ப்பனத்தனம் தான் மேலோங்கி நிற்கிறது.

(வேண்டாம் வேண்டாம் - அந்த மூளை எங்களுக்கு வேண்டாம் என்று சொன்னவர் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங்.)

No comments:

Post a Comment