சென்னை,மே27- சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள் ளியில் வணிகவியல் ஆசிரி யராக பணியாற்றி வந்தவர் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ராஜகோபாலன் (வயது 52). இவர் வகுப்பில் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அநாகரிகமாக பேசியதாக வும், வாட்ஸ்-அப்பில் பாலியல் உணர்வை தூண்டும் வகை யில் குறுஞ்செய்திகளையும், படங்களையும் அனுப்பியதா கவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் போக்சோ உட்பட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ராஜகோபாலனை கைது செய்து நீதிமன்ற காவ லில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜனிடம் தியாக ராய நகர் காவல் துணை ஆணையர் ஹரிகரன் பிரசாத், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று 2ஆவது நாளாக விசாரணை நடத் தினர். அப்போது, ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஆதர வாக பள்ளி நிர்வாகம் செயல் பட்டதா? அவரின் அத்து மீறல்கள் நிர்வாகிகளின் கவ னத்துக்கு ஏற்கெனவே வந் ததா? உள்ளிட்ட சுமார் 100 கேள்விகளை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
அதற்கு கீதா கோவிந்த ராஜன் அளித்த பதில்களை வீடியோவாக பதிவு செய் துள்ளனர். மேலும், எழுத்து பூர்வமாகவும் பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் அடுத்த கட்ட விசாரணைக்கு அழைத் தால் வர வேண்டும் என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்பேசி எண்ணுக்கு தமிழகம் முழு வதிலும் இருந்து பள்ளி, கல் லூரிகளைச் சேர்ந்த மாணவி கள், முன்னாள் மாணவிகள் என சுமார் 30 பேர் தங்கள் ஆசிரியர்களின் அத்துமீறல் கள் தொடர்பாக புகார் தெரிவித்ததாகவும், சென்னையில் மட்டும் 10 பேர் புகார் கூறிய தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment