ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்க ல், அய்தராபாத்:

·     கரோனா தடுப்பூசியை வெளி நாடுகளில் இருந்தும் நேரடியாக மாநிலங்கள் பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு தர உள்ளது.

·     மக்கள் படும் அவலங்களைக் கண்டு கொள்ளாமல், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அதிக கவனம் செலுத்துகிறார் என எழுத்தாளர் ஷோபா தகே குறிப்பிட்டுள்ளார்.

·  கரோனா பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கூறியுள்ள யோசனைகளை மத்திய அரசு நல்ல வண்ணம் எடுத்து செயலாற்றிட வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

·    பீகார், .பி. கங்கை நதியில் 2000 சடலங்கள் மிதந்து வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து இரு அரசுகளும் மக்கள் ஆற்றில் சடலங்களை வீசுவதைத் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

தமிழ்நாட்டில் கரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப் படுத்த ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. அதன்படி மே 15ஆம் தேதி முதல் புதிதாக சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

டெக்கான் ஹெரால்டு:

· நாட்டில் பிரதமர், உள்துறை அமைச்சர், இருக்கிறார்கள். நிர் வாகம் இருக்கிறது. ஆனாலும் ராமன் செயல் என்று அரசு வெறுமனே உள்ளது என சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுட் சாடியுள்ளார்.

- குடந்தை கருணா

15.5.2021

No comments:

Post a Comment