தஞ்சை மறைந்த கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி மகள் ராணி மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

தஞ்சை மறைந்த கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி மகள் ராணி மறைவு

 திராவிடர் கழகத் தலைவர் இரங்கல்

திராவிடர் கழகத்தின் இரண்டாவது பொருளாளராக பல்லாண்டுகள் தொண்டாற்றியவரும், பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் நிறுவன - தாளாளருமான மறைந்த மானமிகு அய்யா கா.மா.குப்புசாமி அவர்களது மகளும், உரத்தநாடு டாக்டர் கார்த்திகேயன் அவர்களது துணைவி யாருமான மங்கையர்க்கரசி என்கிற ராணி அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (15.5.2021) காலை தஞ்சையில் காலமானார் என்பதை அவரது சகோதரர் கா.மா.கு.பன்னீர் செல்வம் அவர்கள் மூலம் அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவரது மறைவால் வாடும் அவரது வாழ்விணையர், குடும்பத்தவர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

15.5.2021

குறிப்பு: கழகத் தலைவர் அவர்கள் மறைந்த பொருளாளரின் மகன் கா.மா.கு.பன்னீர்செல்வத்திடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment