கழகத் தலைவர் இரங்கல்
விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரான மரியாதைக்குரிய முகம்மது யூசுப் அவர்கள் உடல் நலக் குறைவால் நேற்று (14.5.2021) காலமானார் என்பது மிகுந்த வேதனையையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது.
மறைந்த
மனிதநேயர் யூசுப் அவர் கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அடக்கமும், உறுதியும், தெளிவும், தலை மைக்கு மாறா விசுவாசமும் கொண்ட பண்பாளர்.
அவரது
மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின், குறிப்பாக அதன் தலைவர் மானமிகு தொல்.திருமாவளவன் உட்பட அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.5.2021

No comments:
Post a Comment