மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

மறைவு

கல்லக்குறிச்சி பெரியார் பற்றாளரும், திராவிடர் கழகத்தின் பல்வேறு போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங் களிலும் கலந்து கொண்டவரும்கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றத்தின் பொருளாளருமாகிய இரா.நல்லமுத்து அவர்களின் வாழ் விணையர்  செல்லம்மாள் 18-05-2021  அன்று விடியற் காலை 3 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். செல்லம்மாளை இழந்து தவிக்கும் அவரின் இணையர்  நல்லமுத்து அவர்களுக்கும், அவரின்  உறவினர்களுக்கும் மாவட்ட திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

- .சுப்பராயன் (மாவட்ட கழகத் தலைவர்.)

வருந்துகிறோம்

திராவிடர் கழக மாநில மகளிரணி அமைப்பாளர் சி.கிருஷ்ணேஸ்வரி அவர் களின்  மருமகனும்,  மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்  கி.அன்பரசியின்  கணவருமான ரசல் ராஜ் (வயது 36) அவர்கள் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.  அன்னாருக்கு  அபர்ணா,  பிருந்தா என்ற மகள்கள் உள்ளனர்.  அன்னாருக்கு வீரவணக்கத்தையும்,  அவருடைய குடும்பத்தி னருக்கு ஆழ்ந்த இரங்கலையும் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment