டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
கரோனா தடுப்புப் பணியை விட அடுத்த ஆண்டு உபியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்தான் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் முக்கியம் என சிவசேனா கட்சி சாடியுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி வசூலித்தப்பணத்தில் மாநிலங்களுக்கு தருவதற்காக ரூ.1.57 லட்சம் கோடியை மத்திய அரசு கடன் வாங்கி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழ் நாடு ஒரு போதும் அனுமதிக்காது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
· தற்போதைய முழு அடைப்பு ஓரளவு பலனைத் தந்துள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பது குறித்து விரைவில் முடிவு என தமிழக முதல்வர் அறிவிப்பு.
தமிழ்நாட்டில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஆன்லைன் வகுப்புகளின்போது நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசுத்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினரால் பதிவு செய்யப்பட வேண்டும். அந்த பதிவை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் மே 26 அன்று கருப்பு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யாவிட்டால் 2024-ஆம் ஆண்டுவரை தங்கள் போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
· மத்திய அரசு மே 28 அன்று நடத்தவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக நேற்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ் நாடு, ராஜஸ்தான், கேரளம், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநில நிதி அமைச்சர்கள் காணொலி மூலம் மத்திய அரசிடம் இருந்து கரோனா தடுப்புக்கான நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் நிதியைக் கேட்பது தொடர்பாக ஒருமித்த முடிவை எடுத்துள்ளனர்.
· உயர்ஜாதியில் அரியவகை ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பதவிக்கு உபி அமைச்சரின் தம்பி தேர்ந்தெடுக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளான நிலையில், உதவி பேராசிரியர் பதவியிலிருந்து விலகியுள்ளார். ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் குடும்ப வருமானத்திற்கு அதிகமாக இருந்தால், சான்றிதழ் பெற முடியாது என ஆணை இருந்தும், அமைச்சரின் தம்பி என்பதால் பொய்யாக சான்றிதழைப் பெற்றுள்ளார்.
· அலோபதி வைத்தியம் குறித்து தவறான தகவல்களை சாமியார் பாபா ராம்தேவ் கூறியது குறித்து அவர்மீது தேச விரோதச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தி ஹிந்து:
· ஹிந்தி பேசும் மாநிலங்களில் நிலவும் ஜாதி அரசியலை விட தென் மாநிலங்கள் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் அரசியல் ஹிந்துத்துவாவை மிகவும் வலுவாக எதிர்க்கிறது என்பதற்கு மேற்கு வங்கம் ஒரு சான்று. ஆனால் அதே நேரத்தில் அசாமில் பாஜகவின் வெற்றியையும் நாம் ஒதுக்கிவிட முடியாது என்கிறார் பத்திரிக்கை யாளர் வர்கீஸ் கே.ஜார்ஜ்.
· மராட்டிய ஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டை மத்திய அரசும் மகாராட்டிரா அரசும் தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் சத்ரபதி சிவாஜியின் வாரிசு எனக் கூறப்படும் பாஜக எம்.பி. சம்பாஜி ராஜே.
- குடந்தை கருணா
27.5.2021
No comments:
Post a Comment