தொடங்கியது தமிழ்நாட்டின் முன்னேற்றம்!
தலை நிமிர்ந்த தமிழர்கள் பொறுப்பில் வந்தார்
தாங்கொணா துயர் இந்தத் தொற்றை ஒழிப்போம்!
தரணி வாழ் தமிழர் வாழ்வைக் காப்போம்!
தொழில் முனைவோர் அனைவரையும்
தொண்டு செய்யும் நல்லோரை மற்றும்
தமிழ் வளர்க்கும் அறிஞர் என்று
இவரையெலாம் அணைத்திடுமே
தளபதியும் தலைவரானார் வாழ்க நன்றே!
கலைஞர் வழி , அண்ணா வழி
பெரியார் கொள்கை என்றே
தமிழ்நாடு முன்னேறும் நாளும் காண்போம் .
நம் பங்கு உழைப்பும் தொண்டும்
நல்கிடுவோம்! வாழ்க தமிழ்! வாழ்க, வாழ்க!
- சோம. இளங்கோவன்,
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா
No comments:
Post a Comment