தி.மு.க. தலைவருக்கு குவியும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

தி.மு.க. தலைவருக்கு குவியும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்

 சென்னை, மே 5- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்கிறார்தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளையும், பாராட் டுகளையும் தெரிவித்துள்ளதுடன் தமிழக வாக்காளர் களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

சென்னைப் பத்திரிகையாளர் யூனியன்

சென்னைப் பத்திரிகையாளர் யூனியன்  சார்பில் அதன் தலைவர் வே.சிறீதர், பொதுச்செயலாளர் எல்.ஆர்.சங்கர், பொருளாளர் மணிமாறன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை வருமாறு,

தமிழக மக்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்று               முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு..ஸ்டாலின் அவர்களுக்கு சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் (Madras Union of Journalists - MUJ) வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

கரோனா பெரும் தொற்றாலும், பொருளாதார நெருக் கடியாலும் தமிழகம் அல்லாடிக் கொண்டிருக்கும் சூழலில், மாநிலத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய்க் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தை திமுகவிடம் மக்கள் ஒப்படைத்திருக்கிறார்கள். தமிழகம் எதிர்கொண் டிருக்கும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, தமிழ கத்தை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்துச் சென்றிட திமுக தலைவரும் முதலமைச்சராகப் பதவியேற்க இருப்ப வருமான மு..ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கரோனா பெரும் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வரும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக சட்டரீதியாக அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும் என்றும், கரோனா கொடும் காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர் களுக்கு உரிய நிவாரண நிதியை விரைவாக வழங்கிட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிக்கையாளர் யூனியன் (MUJ)   கேட்டுக்கொள்கிறது.

சென்னை பத்திரிக்கையாளர் கோரிக்கையை ஏற்று திமுக தலைவர் பத்திரிகையாளர்களை முன்களப் பணியா ளர்கள் என அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பபாசி உறுப்பினர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு,

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கும் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது கட்சியைச் சேர்ந்த புதிய சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்க விருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

எழுத்தாளர்கள்மீதும் பதிப்பாளர்கள், பதிப்புத்துறை மீதும் மிகுந்த பற்றினையும் பாசத்தினையும் தி.மு.. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் வைத்திருந்தமையை இந்த நேரத்தில் நினைவு கூருகிறோம்.

2007 ஆம் ஆண்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியைத் திறந்து வைக்க வருகை தந்த அப்போதைய தமிழக முதல் வரான டாக்டர் கலைஞர் அவர்கள் தமது சொந்த நிதியி லிருந்து ஒரு கோடி ரூபாயினை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திடம் வழங்கி அந்தத் தொகையினை வைப்புத் தொகையாக வைத்து அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து இலக்கியம், கவிதை, நாடகம், ஆங்கிலப் படைப்பாளர், இந்திய பிற மொழியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் என 6 எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் பொற்கிழியாக வழங்குமாறு கூறி எங்களிடம் நிதியை வழங்கியதையும், அவர்கள் ஆணையின்படி தொடர்ந்து ஆண்டுதோறும் கலைஞர் அவர்கள் நினைவாக எழுத்தாளர்களுக்கு விருதும் பொற்கிழியும் வழங்கி வருவதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறோம். பொது நூலகங்களுக்கு 1000 படிகள் வழங்கவும் ஆணை பிறப்பித் தார்கள். உலக அளவில் பெருமை கொள்ளும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தினையும் நிறுவினார்கள்.

அவர்கள் வழியில் ஆட்சியினை அமைக்கும் தங்கள் தலைமையிலான அரசும் பதிப்புத்துறைக்கும் எழுத்தாளர் களுக்கும், நூலகங்கள் மீதும் தனிக் கவனம் செலுத்தி வளர்ச்சிபெற வைப்பீர்கள் எனவும் நம்புகிறோம்.

முதல்வராகப் பொறுப்பேற்கும் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கும், புதிதாகப் பொறுப்பேற்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், துணை நின்ற கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பபாசி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment