தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களில் செப்., 15க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 23, 2021

தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களில் செப்., 15க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

 சென்னை,ஜூன்23- தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்க முடியாது என்றும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று (22.6.2021) இந்த உத் தரவைப் பிறப்பித்துள்ளது. இதுவரை தேர்தல் நடைபெறாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நீதிமன்ற உத் தரவின்படி விரைவில் உள்ளாட் சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

No comments:

Post a Comment