சென்னை, ஜூன் 23 தமிழ்நாடு முதலமைச் சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் பணிகள் என்னென்ன என்பது பற்றிய உத்தரவை தமிழக அரசு வெளியிட் டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அதன் தொடக்கமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த் தினார். அவர் தனது உரையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச் சியை எட்டுவதற்கான பாதைகளை வகுத்து, தமிழ்நாடு அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சருக்கான பொரு ளாதார ஆலோசனை குழு ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.
அந்த குழுவில் இடம் பெறும் உறுப்பினர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து அந்த குழுவின் பணிகள் குறித்து நிதித்துறை கூடு தல் தலைமைச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணன் வெளி யிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்ப தாவது:-
பொருளாதார ஆலோசனை குழு: கரோனா தொற்று பர வலால் கடுமையான நிதி நெருக்கடியில் தற்போது அரசு சிக்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் தற் போதய நிலை, பெருத்த வருவாய் இழப்பிலும், அதிக கடன் சுமையிலும், நிதிப்பற்றாக்குறையிலும் உள்ளது. ஆனால் அதே நேரத்தில், மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி விரைவாக இருக்கும் என்று மக்கள் நம்புகி றார்கள். எனவே இந்த சூழ்நிலையில் அரசுக்கு பொருளாதார நிபுணத் துவம் வாய்ந்த ஆலோ சனைகள் தேவைப்படு கின்றன. இதற்காக தமிழ் நாட்டின் பொருளாதா ரம், சமுதாயம், இந்திய மற்றும் உலக பொரு ளாதார நிலை பற்றி நன் றாக அறிந்த பொருளா தார நிபுணர்கள் தேவை யாக உள்ளனர். எனவே பொருளாதார நிபுணத் துவம் வாய்ந்த 5 பேரை உறுப்பினர்களாக கொண்டு முதல்-அமைச் சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவை நியமித்து அரசு உத்தர விடுகிறது.
யார், யார்?: அந்த குழுவில், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கழகத்தின் பேரா சிரியரும், நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொரு ளாதார மேம்பாட்டு நிபுணர் மற்றும் ராஞ்சி பல்கலைக்கழக வருகை பேராசிரியர் ஜீன் ட்ரீஸ், தமிழ்நாடு அரசின் முன் னாள் செயலாளரும், மத்திய அரசின் செய லாளரும், பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகருமான எஸ்.நாராயணன் ஆகி யோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
குழுவின் பணிகள்: இந்த குழுவுக்கான பணிகள் என்ன என்பது பற்றிய ஆணையும் பிறப் பிக்கப்படுகிறது. பொரு ளாதாரம் மற்றும் சமூக கொள்கைகள், சமூகநீதி, மனித மேம்பாடு தொடர் பான பிரச்சினைகள் ஆகியவை தொடர்பான பொதுவான வழிகாட் டுதல்களை இந்த குழு அளிக்கும். குறிப்பாக, பெண்களுக்கு சமவாய்ப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான மேம் பாடு பற்றிய வழிகாட் டுதல்களை வழங்கும்.
பொருளாதார வளர்ச்சிக்கான உந்துதல், வேலைவாய்ப்பு மற்றும் மாநில உற்பத்திகள் பற் றிய கருத்துகளை வழங் கும். மாநிலத்தின் ஒட்டு மொத்த நிதி மேம்பாட்டு வழிகாட்டுதல்கள், மக்க ளுக்கு இன்னும் சிறப்பான சேவைகளை வழங்கும் மாநிலத்தின் திறனை மேம்படுத்துவது பற்றிய ஆலோசனைகளை இந்த குழு அளிக்கும். புதிய சிந்தனைகள், வளர்ச்சித் தடைகளுக்கான தீர்வு ஆகியவற்றையும் குழு வழங்கும்.
முதல்தர குழு: இந்த குழு அவ்வப்போது கூடியோ அல்லது காª ணாலி மூலமாகவோ ஆலோசிக்கலாம். மாநில அரசின் நோக்கத்தை அடைவதற்கான செயல் பாட்டு முறைகளை இந்த குழுவே முடிவு செய்ய லாம்.
விரைவாக செயல் பட்டு முதல்-அமைச்ச ருக்கோ அல்லது அர சுக்கோ ஆலோசனை களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குழு உறுப் பினர்கள் அவர்களா கவோ அல்லது அழைப் பின் பேரிலோ முதல்-அமைச்சரை சந்திக்க லாம்.
இந்த குழுவின் செய லகமாக நிதித்துறை இருக்கும். குழுவின் ஒருங் கிணைப்பாளராக நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இருப் பார். பயணம், வரவேற்பு செலவீனம் போன்றவற் றில் இந்த குழு முதல்தர குழுவாக கருதப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment