சட்டமன்றத்தில் இன்று தமிழ்நாடு நகராட்சி, ஊராட்சி சட்டங்கள் திருத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 23, 2021

சட்டமன்றத்தில் இன்று தமிழ்நாடு நகராட்சி, ஊராட்சி சட்டங்கள் திருத்தம்

சென்னை,ஜூன்23- சட்டமன்றத்தில் இன்று (23.6.2021) அவை கூடியதும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  கே.என்.நேரு அவர்கள்  2021ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட் டங்கள் இரண்டாம் திருத்த சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தினார். அதில் கூறியிருப்பதாவது,

அரசு இயந்திரம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கோவிட் _ 19 திடீர் பரவலின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தினை தணிப்பதற்காக போர்க்கால அடிப் படையில் தடுப்பு, பாதுகாப்பு, துயர் தணிப்பு மற்றும் நலன்சார்ந்த நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. எனவே, மறுசீரமைக்கப் பட்ட புதிய ஒன்பது மாவட்டங்களில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சிற்றுரு பகுதி களின் எல்லைகளை வரையறை செய்வதற்கான அறிவிக்கைகயையும் சாதாரண தேர்தல்களை நடத்தலுக் கான முன்னேற்பாடான பணிகளை யும் திட்டமிட்டபடி நிறைவு செய்ய இயலவில்லை.

மேற்கண்ட சூழ்நிலைகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 2021 ஜூன் 30 ஆம் தேதியன்று முடி வடைவதன் காரணமாக தனி அலு வலர்களின் பதவிக்காலத்தை 2021 டிசம்பர் 31 வரையிலான மேலும் ஆறு மாத காலத்துக்கு  அல்லது பேரூ ராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான சாதாரண தேர்தல்களுக்கு பின்பு நடத்தப்படும் மன்றத்தின் முதல் கூட்டம்வரை இதில் எது முந்தையதோ அதுவரை யிலும் நீட்டிப்பதற்காக பேரூராட் சிகள், நகராட்சிகள் மற்றும் மாநக ராட்சிகள் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்ய அரசானது முடிவு செய்துள்ளது என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ஊராட்சிகள் சட்ட முன்வடிவு அறிமுகம்

இன்று சட்டமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்கள் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட் சிகள் இரண்டாம் திருத்த சட்ட முன் வடிவை அறிமுகம் செய்து வைத்தார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதா வது: புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் அதாவது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல் வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் தனி அலுவலர் களின் பதவிக்காலமானது 2021 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 30ஆம் தேதி யன்று முடிவடைய உள்ளது. அதன் காரணமாக தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2021ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31ஆம் தேதி வரை மேலும் ஆறு மாத காலத்துக்கு அல் லது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான சாதாரண தேர்தல்களுக்கு பின்பு நடத்தப்படும் முதல் கூட்டம் வரை இதில் எது முந்தையதோ அதுவரையில் நீட்டிப் பதற்காக 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 21/1994) திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment