'ஸ்மார்ட்போன்' வசதி எத்தனை மாணவர்களிடம் உள்ளது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 23, 2021

'ஸ்மார்ட்போன்' வசதி எத்தனை மாணவர்களிடம் உள்ளது?

 சென்னை, ஜூன் 23 தற்போது எத்தனை மாணவர்களிடம்திறன் பேசிவசதி இருக்கிறது என்ற விவரத்தை ஆசிரியர்கள் கேட்டறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

*இணையதள வசதியுடன்கூடிய திறன்பேசி வசதி, மேல்நிலை வகுப்பு, கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் சகோதர, சகோதரி மற்றும் உறவினர்களிடம் அரசு வழங்கிய மடிக்க ணினி (இணையதள சேவையுடன் கூடிய) வசதி எத்தனை பேரிடம் உள்ளது என்ற விவரத்தையும் ஆசிரியர்கள் பெற வேண்டும்,

* திறன் பேசியில் வாட்ஸ்-அப் செயலியை பதிவிறக்கம் செய்து மாணவர்கள், பெற்றோர் பயன்படுத்த தெரிந் துள்ளனரா என்பதையும், கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வசதி, திறன் பேசியில் இணையதள சேவையோடுகூடிய வாட்ஸ்-அப் வசதி, இணையதள சேவையுடன் கூடிய மடிக்கணினி வசதி ஆகியவை இல்லாத மாணவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தையும் ஆசிரியர்கள் கேட்டறிந்துகொள்ள வேண்டும்.

*இத்தகைய நவீன தகவல் தொழில்நுட்ப வசதி ஏதுமில்லாத மாணவர்களுக்கு எத்தகைய மாற்று வசதியை கையாண்டு கற்றல் நிகழ்வை அளிக்க முடியும் என்பதை ஆசிரியர்கள் முன் கூட்டியே திட்டமிட்டு மாணவர்களுக்கு உரிய கல்விவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment