ஆசிரியருக்குக் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 23, 2021

ஆசிரியருக்குக் கடிதம்

 நேரிய குறுக்குச் சாலை!

கண்களை மூடிக்கொண்டு ஒரு புத்தகத்தைத் திறந்தாலும்  பின்னர் பார்வை படும் எந்த வரிகளிலும் பக்கம் நகராமல் நம் விழிகள் பதியும், மீண்டு எழ மனமோ மிகத் தயங்கும், ஒன்றிரண்டு பக்கங்கள் படித்தாலே நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும். அந்த புத்தகத்தைத்தான் ஒருமுறை படித்தேன். பின் நாளும் நாளும் விரும்பிப் படித்தேன்.அந்த எழுத்துகளில் நானும் விழுந்தேன்! ஆனாலும் எழ மறுத்தேன்! விழுந்த இடத்தில் இன்பமும் பயனும் பெற்றதால் மீண்டும் மீண்டும் விழவே எத்தனித்தேன்! ஆழ மூழ்கி முத்தெடுக்க ஆசை கொண்டாலும் வாழ்க்கைப் போராட்டங்களில் வாய்ப்பான காலம் (அதுவும் பெண் ணாகியதால்) அருகி தான் இருந்தது. அதுபோன்று ஓர் அரிய புத்தகம் வேறொன்று இருக்குமா என்று கூட அறிய அவசியமில்லை என்றும், அள்ள அள்ளக் குறையாத நல்லவை  மட்டுமே  நிறைந்திருக்கும் அந்த நூலொன்றே படிக்க, பயனுற, இளைப்பாற,  தமிழின் இனிமை பெற, பொது அறிவு பெற நமக்கு போதுமென்றும் தோன்றியது. ஆம் அந்த புத்தகம் தான் 'வாழ்வியல் சிந்தனைகள்!' நூலைப் படித்ததும் நூலாசிரியரைப் (நம் ஆசிரியர்) பிடித்தது... நூலா சிரியரைப் பிடித்ததால் அவர் வாழ்க்கையை அறியும் ஆவல் தீயாய்ப் பிடித்தது. இத்தனையும் பிடிக்க, அவரைத் தேடி நான் படிக்க பெரியார் இயக்கம் பெரிதும் பிடித்தது.ஏனெனில் பெரியார் சிந்தனைகளின் இயக்கமாக அவர் இருப்பதைக் கண்டு கொள்ள முடிந்தது. அன்று அவர் எழுத்தில் விழுந்தேன், எழ மறுத்தேன், விளைவு என் வாழ்வு எழுந்தது, உயர்ந்தது. ஏனெனில் ஆசிரியரின் பள்ளித் தோழர் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னது போல அவரின் எழுத்துகள் சுத்தமான அறிவு மற்றும் அனுபவத்தால் தயாரிக்கப் பட்டவை.

இன்று வரை தமிழர் தலைவரின் 'வாழ்வியல் சிந்தனைகள்' பதினைந்து தொகுதிகள் வெளிவந் துள்ளன. உடல் சிக்கலா, உள்ளச்சிக்கலா, உறவுச் சிக்கலா உடனடி தீர்வுகள் (Ready made answers) அதிலுண்டு.  ஒரு சிரமமும் இல்லை நமக்கு, அதெல் லாம் உழைப்புத் தேனீயாக சேகரித்துத் தந்த ஆசிரியர் அவர்தம் பாடு!

ஆயிரம் பேர் எழுதலாம் ஆசிரியர் போல் வருமா..? அன்றொருநாள் ஏலமலையில் கேட்டே விட்டேன், "ஆயிரம் 'வாழ்வியல் சிந்தனைகள்' கடந்து விட்ட  இந்நிலையில் தங்களின் மனநிலை என்னவோ அய்யா?" என்று. ஆய்ந்தறிந்த அறிஞர் அவர் சொன்னார், "மகிழ்ந்திருக்கின்றேன். கடவுளை மற என்று மட்டும் சொல்லவில்லை பெரியார், மனிதனை நினைக்கச் சொன்னாரே! மனிதனை நினைப்பதால்தான் இந்த சிந்தனைகளின் தேவை எனும்போது நம்மேல் மாற்றுக் கருத்து கொண்டவர்களை கூட அது மாற்றிவிடும் அல்லவா?" என்றார். அதன்படி இவர் எழுதிய புத்தகமா வேண்டாம் என்று சொன்னவர்கள் கூட தேடிப்பிடித்து படிக்கும் நிலை வந்தது.

ஆம்!  தந்தை பெரியாரை தம் வாழ்வியல் கருத்துகள் மூலமாகவும், தமது வாழ்வின் மூலமாகவும் அறியப்படுத்துகிற "ஆசிரியரை அறிதல்"( Learning Asiriyar) என்பதும், தந்தை பெரியார் கண்டறிந்த சமூகநீதி சூத்திரத்தை (Periyar's formula) பதிய வைத்துக் கொள்ள "ஆசிரியரைத் தொடர்தல்(Following Asiriyar)  என்பதுமான இலகுவான  சூட்சமங்கள் எனக்கு அப்போது நன்கு புரிந்தன. இன்று நானறிந்த பெரியாரை பல பெண்களுக்கும் அறிமுகம் செய்ய இந்த வழிகளே ( Easy and powerful tips)  எனக்கு பெரிதும் உதவின. இந்த அனைத்திற்கும் 'வாழ்வியல் சிந்தனைகள்' என்பதே வாசற்படியாக அமைந்தது என்பதை உரக்கக் கூவும் இவ்வேளையில் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளிலும் (ஏன் பள்ளி களிலும் கூட) நல்லொழுக்க வகுப்புப்பாடமாக இவை இடம்பெற வேண்டுமே என்ற நியாயமான ஏக்கம் எழாமல் இல்லை.  ஏனெனில் 'பெரியார் ஒரு  நன்னெறி இலக்கியம்'  என்றால் அதன் பொழிப்புரையாக நம் தமிழர் தலைவர் இருக்கிறார்.

தன்னுடைய பேச்சாற்றல், எழுத்தாற்றல், படிப் பாற்றல் (வழக்குரைஞர் துறைசார் அறிவு உட்பட), உழைப்பாற்றல், செயலாற்றல் அத்தனையும் ஒருங் கிணைத்து பெரியாரை புரிந்துக் கொள்ள வைக்கின்ற தன்மை என்பது தனித்துவமானது, தன்னிகரற்றது. அதற்கு  பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் (20.6.2021) அவர் ஆற்றிய உரையும் சான்று பகலும்.

அமெரிக்கக் கல்வியாளர் ஒருவர் கல்வி என்றால் என்ன என்பதை  "Education is the process of pulling out it is not putting in"    என்று சொன்னதை எடுத்துக்காட்டி, அதாவது கல்வி என்பது மாணவர்கள் அறிவுத்திறனை வெளிக்கொண்டு வருவது தானே தவிர ஒன்றைத் திணித்து நிரப்பி விடுவது அல்ல, ஆனால் நம்முடைய நாட்டில் வல்லுநர்கள் எல்லாம் கல்வி என்பது ஆசிரியர்கள் கேள்வி கேட்பதும், மாணவர்கள் பதில் சொல்வதும் தான் என்று நினைத்திருந்த பொதுப்பார்வையை மாற்றி சிந்தித்தவர் தந்தை பெரியார் தான் என்றார். மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும் அதற்கு ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும் அதுதான் 'கல்லுதல்' என்று கல்லூரி காணாத தந்தை பெரியார் அவர்கள்  தான்கல்விக்கு இலக்கணம் தந்தார் என சுருங்கச் சொல்லி மாணவர் களுக்கு விளங்க வைத்தார். 'பகுத்தறிவுச் சுடரேந்துவீர்' என்ற நூலை வாசிக்கச் சொன்னார்.

அதோடு மாணவர்கள் மூளையில் இருக்க வேண்டிய முக்கோண நினைவுக் குறிப்பை அழகுற எடுத்துச் சொன்னார். முதலாவதாக தன்மானம் வேண் டும், தன்மானம் இருந்தால் தானாக தன்னம்பிக்கை தோன்றும், தன்னம்பிக்கை தோன்றும்போது நாம் எல்லாவற்றிலும் தன்னிறைவு பெறுவோம் என்றார். அத்தகைய வாழ்வு தான் தந்தை பெரியார் அவர்கள் சொன்ன "சுயமரியாதை சுகவாழ்வு" என்று எளிய விளக்கத்துடன் பாடம் நடத்தினார். ஆசிரியர் என்றால் அவர் தான் ஆசிரியர். அதனால் பாடத்திட்டத்தின்படி படிப்பதும், தேர்வு எழுதி முடித்து விடுவதும் மட்டுமல்ல பெரியாரியல். அது ஒரு சீரிய வாழ்வியல். அதை தமிழர் தலைவரின் மூலமே  பாடமாக நம் இளைஞர்கள் கற்கலாம். பெரியார் எனும் பேரறிவை தொட்டுப் பிடிக்க நம் மாணவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் எனும் "நேரிய குறுக்குச்சாலையை" எட்டிப் பிடிப்பது மிகச் சிறந்த இலகுவான வழியாம்! அவ ரையே பின்தொடர்ந்து படிப்போம் வாருங்கள் மாண வர்களே! நாளைய உலகம் பெரியார் உலகமாகட்டும்!!

- . கவிதா,

திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவர்

No comments:

Post a Comment