அய்தராபாத்,ஜூன்23- ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர் நீதி மன்றத்தின் உத்தரவை அமல்படுத் தாத 2 அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு நேற்று ஆந்திர உயர்நீதிமன்றம் ஒரு வாரம் சிறைத்தண்டனை விதித்தது.
ஆந்திர அரசு ஊழியர்கள் 36 பேர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக அவர்களை பணி நிரந்தரம் செய்ய ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப் பித்தது. ஆனால், இந்த உத்தரவை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் களான கிரிஜா சங்கர் மற்றும் சிரஞ்சீவி சவுத்ரி ஆகியோர் அமல்படுத்த வில்லை. இது குறித்து பாதிக்கப்பட் டவர்கள் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதனால், தொடர்ந்து 4 முறை சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் விளக்க அறிவிக்கை அனுப்பியது. இதற்கு பதில் அனுப்பாத அய்ஏஎஸ் அதிகாரிகள், 36 பேரின் பணியையும் நிரந்தரம் செய்யவில்லை. இவ்வழக்கு குறித்து நேற்று இரு அய்ஏஎஸ் அதிகாரிகளும் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராயினர். அப்போது உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாத இருவ ரையும் ஒருவாரம் வரை சிறையில் அடைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment