பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!
சென்னை,ஜூன்23- கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப் படுத்தக் கூடாது என பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளில் 75 விழுக்காட்ட ளவில் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். கட்டணம் செலுத்தாத மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக்கூடாது. மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வராத வகையில் செயல்பட வேண்டும். பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கையில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என மெட்ரிக், சி.பி.எஸ்.இ., அய்.சி.எஸ்.இ., அய்.ஜி. சி.எஸ்.இ., அய்.பி. பள்ளிகளுக்கு தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவு றுத்தியுள்ளது.
No comments:
Post a Comment