சென்னை, ஜூன் 23 அரியலூர், கடலூர் மாவட்டங்களில் எண் ணெய்க் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
வாழ்வாதாரத்தை சிதைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக் காது என்ற நம்பிக்கை உள்ளது. வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட சட் டத்தை அவமதிக்கும் வகையில் எண்ணெய்க் கிணறு அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்வது தொடர்பாக ஓ.என்.ஜி.சி. நிறுவ னம் சார்பில் விண்ணப்பித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கோரிக் கையை நிராகரிக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு தி.மு.க. அரசு துணை போகாது என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு பதில் அளித்து, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
அனுமதி வழங்கப்படாது: ஹைட்ரோ கார்பன் திட்டத் துக்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் அரியலூர், கடலூர் மாவட்டத்தில் 15 இடங்களில் எண்ணெய்க் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம், அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. பாது காக்கப்பட்ட மண்டலமாக அறி விக்கப்பட்ட தஞ்சாவூர், திருவா ரூர், நாகை, கடலூர், புதுக் கோட்டை மாவட்டங்களில் எண் ணெய் கிணறு அமைப்பது தொடர் பாக ஆய்வு செய்யவோ, உற்பத்தி செய் யவோ அனுமதி வழங்கப் படாது.
ஆனால், இந்த பகுதிகள் பாது காக்கப்பட்ட மண்டலங்கள் அல் லாத பகுதிகள் என்பதால், இந்த இடங்களில் எண்ணெய் கிணறு களை அமைக்கலாம் என்று ஓ.என். ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித் திருந்தது. பாதுகாக்கப்பட்ட மண் டலங்களை தவிர்த்து மற்ற இடங் களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க விண்ணப்பித் தால், அதன் பாதிப்புகள் குறித்து கண் டறிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற் படுகிறதா? என்பதை கண்டறிய விரைவில் வல்லுனர் குழு அமைக் கப்படும்.
ஆய்வறிக்கை: அந்த குழு, மண்ணின் வளம், நிலத்தடி நீர் பிரச்சினை குறித்தும் ஆராயும். பொதுமக்களிடம் கருத்து கேட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கும். இதுபோன்ற மண் சார்ந்த விஷ யங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆய்வறிக்கை சமர்பிக்க குழு அமைக்கப்படும்.
கடலூரில் 10, அரியலூர் 5 இடங்களில் எண்ணெய் கிணறு அமைப்பது தொடர்பாக, ஓ.என். ஜி.சி.யின் விண்ணப்பத்தின் மீதான பரிசீலனைக்கு பிறகு, கடந்த 21-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் மீத்தேன், ஷேல்’ கேஸ் திட்டங்களுக்கு அனு மதி வழங்கப்படாது என்பதை திட் டவட்டமாக தெரிவித்து கொள் கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment