தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு சிறை பிலிப்பைன்சு அதிபர் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 23, 2021

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு சிறை பிலிப்பைன்சு அதிபர் எச்சரிக்கை

மணிலா, ஜூன் 23 கரோ னாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும் பாதவர்கள் கைது செய்யப் படுவார்கள் என பிலிப்பைன்சு அதிபர் எச்சரிக்கை விடுத்து உள் ளார்பிலிப்பைன்சு நாட்டில்  ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக கரோனா வைரஸ் தரவு களின்படி, 1,364,239 கரோனா பாதிப்புகளையும் மற்றும் 23,749 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

பிலிப்பைன்சு நாட்டின் மொத்த மக்கள் தொகை யான 110 மில்லியனில் இந்த ஆண்டுக்குள் 7 கோடி  பேருக்குத் தடுப்பூசி போடுவது அரசாங்கத்தின் இலக்கு. இதுவரை அங்கு 21 லட்சம் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிலிப்பைன்சு தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில், தடுப்பூசி போட்டுக் கொள்ளக் குறைவானவர்களே சென்றுள்ளனர்.

இதை தொடர்ந்து அந்நாட்டுப் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே தெரிவித்துள்ளதாவது: தொற்று நோயின் இரண்டாவது அலை நாட்டுக்கு  பேரழிவு தரும். கரோனா வுக்கு  எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர் கைது செய்யப்படுவார்கள். தடுப்பூசி போடாதவர்கள் நாட்டை விட்டு வெளி யேறுங்கள் நீங்கள் இந்தியா அல்லது அமெரிக் காவுக்கு செல்லுங்கள்.

நாடு மருத்துவ நெருக்கடியில் இருக்கிறது. அரசின் ஆலோசனையைப் பொருட்படுத்த மக்கள் மறுப்பது எரிச்சலூட்டுவதாக உள்ளது. கோவிட் தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். வைரஸைக் கட்டுப்படுத்த நாம்  மூன்று மடங்கு முயற்சிக்க வேண்டும் என்று அவர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment