“தொழில் துவங்க தேவையான புதிய கொள்கைகளும் நிதி ஆதாரங்களும்”
வல்லம், ஜூன் 23 பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியும் தொழில் முனைவோர் மேம்பாடு & நவீன பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு நவீன & தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து “தொழில் துவங்க தேவையான புதிய கொள்கைகளும் நிதி ஆதாரங்களும்” (New Strategy and Funding for Startup’s) என்ற தலைப்பில் ஆன்லைன்
வாயிலாக 10.06.2021 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற கருத்தரங்கில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 240 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் திருச்சி, அண்ணா வணிக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பாதுகாப்பு அறிவியலாளர் வினோத் மலைக்கனி “தொழில் துவங்க தேவையான புதிய கொள்கைகளும் நிதி ஆதாரங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். வேலைக்கு விண்ணப்பம் போட்டு விட்டு காத்துக்கிடக்காமல் சொந்தமாக தொழல் துவங்கி மற்ற இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும் என்று கூறிய அவர் என்னென்ன தொழில்களுக்கு வாய்ப்புகள் அதிகம் அவற்றை துவங்குவதற்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தை எவ்வாறு திரட்டுவது என்பது பற்றி விரிவாக விளக்கினார். மேலும் ஆர்வத்துடன் வினாக்கள் எழுப்பிய மாணவர்களுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் பதிலளித்து உற்சாகமூட்டினார்.
முன்னதாக தொழில் முனைவோர் மேம்பாட்டு மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் எம். மார்டின் வரவேற்புரை வழங்கியதோடு சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
இக்கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியையும் தொழில் முனைவோர் மேலாண்மை மேம்பாட்டு துறை மேலாளருமான தி.விஜயலெட்சுமி நன்றியுரை ஆற்ற கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது.
உத்தரப் பிரதேச முதல்வராக சாமியார் மீண்டும் வரமாட்டாராம்!
பா.ஜ.க.விற்குள் தொடரும் குடுமிபிடி சண்டை
லக்னோ ஜூன் 23 உத்தரப்பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வரை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார் இவரது மோசமான நடவடிக்கைகள் காரணமாக இவரைப் பற்றி கட்சியில் முரண்பாடான அபிப்ராயங்கள் நிலவி வருகின்றன. ஒரு சிலர் மோடிக்கு பிறகு யோகி இந்தியாவின் அடுத்த பிரதமராகப் பதவி ஏற்பார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். வேறு சிலர் யோகியின் மோசமான நடவடிக்கைகளால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமின்றி நாடெங்கும் பாஜகவின் மீது அதிருப்தி பெருகி வருவதாகத் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று யோகி மீண்டும் முதல்வர் வேட்பாளர் என கூறப்படுகிறது. ஆனால் பாஜக மூத்த தலைவர் இந்த ஊகத்தை தனது அறிவிப்பின் மூலம் கேள்விக் குறி ஆக்கி உள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியா அம்மாநிலத்தின் இரண்டு இணை அமைச்சர்களில் ஒருவராக உள்ளார். அவர் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கும். அதன் பிறகு மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம் உத்தரப்பிரதேச அடுத்த முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவி ஏற்க மாட்டார் என்பதை மவுரியா தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். சமீபத்தில் தான் இந்தப்பிரச்சினை பெரிதாகி சாமியார் முதல்வர் டில்லி சென்று அமித்ஷா மோடியிடம் மிரட்டிவிட்டு வந்த நிலையில் மீண்டும் இப்பிரச்சினையை உள்ளூர் பாஜகவினரே துவக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment