தமிழ்நாட்டிற்கு 33 டிஎம்சி தண்ணீர் திறக்க கருநாடக அரசுக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

தமிழ்நாட்டிற்கு 33 டிஎம்சி தண்ணீர் திறக்க கருநாடக அரசுக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

புதுடில்லி,ஜூன்26- காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12ஆவது ஆலோசனைக் கூட்டம்   நேற்று (25.6.2021) நடைப் பெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ். கே.கல்தார் தலைமை தாங்கினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ கத்திற்கு உரிய நீர் திறக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல் -அமைச் சர் மு..ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலை யில் இந்த கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் கருநாட கம் ஆகிய 4 மாநிலங்க ளைச் சேர்ந்த அதிகாரி கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக் சேனா, காவிரி தொழி நுட்பத் தலைவர் சுப்பிர மணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ் நாட்டிற்கு கருநாடக அரசு தரவேண்டிய தண் ணீர் குறித்து பேசப்பட் டது. கூட்டத்தில் மேக தாது அணை வழக்கு நிலு வையில் உள்ள நிலையில், அணை கட்டுவது தொடர் பான எந்த ஆரம்பக்கட்ட பணியும் மேற்கொள்ளக் கூடாது என தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டது.

கூட்டத்தில் தமிழ் நாட்டுக்கு 33 டிஎம்சி தண்ணீர் திறக்க கரு நாடக அரசுக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஜூன், ஜூலை மாதத்திற்கான தண் ணீரை திறக்க கருநாடக அரசுக்குகாவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment