சட்டப்பேரவையில் பேசும்போது முதலமைச்சர் ‘ஒன்றிய அரசு’ எனக் கூறியது சரிதான்! `இந்து’ என்.ராம் கருத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

சட்டப்பேரவையில் பேசும்போது முதலமைச்சர் ‘ஒன்றிய அரசு’ எனக் கூறியது சரிதான்! `இந்து’ என்.ராம் கருத்து!

சென்னை, ஜூன் 26 - தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் சட் டப்பேரவையில் `ஒன்றிய அரசுஎன்று அழைப்பது பற்றி விளக்க மாகப் பேசினார்.

அதை `தி இந்து’  We will continue to use the term ‘Union gov.’, Says Stalinஎன்ற தலைப்பில் 24.6.2021 அன்றுசெய்தியாக வெளியிட்டிருந்தது. அதுகுறித்து ` தி இந்துகுழுமத் தலைவர்இந்துஎன்.ராம் தமது `ட்விட்டர்பக்கத் தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு உள்ளார்.

`முற்றிலும் சரியானது. பா... இதை வெளிப்படையாக முதன் மையாக எடுத்துக்கொள்ள வேண் டும். குடியரசாகவும் கூட்டாட்சி அரசமைப்புச் சட்டத்திற்குள்ளும் இருக்கும் இந்தியா, ஒன்றிய அரசு தான் என்பதில் எந்தவிதமான சர்ச் சைக்கும் இடமில்லை. பாரத் என்று சொல்லப்படும் இந்தியா, ஒன்றிய அரசாகத்தான் இருக்கும். (பார்க்க, பகுதி 1)

`தி இந்துஜூன் 24ல் செய்தி வந்துள்ளது.

இவ்வாறு தனது `ட்விட்டர்பக் கத்தில்இந்துஎன்.ராம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment