பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் 4,000 போலி மாணவர் சேர்க்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் 4,000 போலி மாணவர் சேர்க்கை

இலவச சீருடை, காலணி உள்ளிட்டவற்றுக்கான நிதியில் ஊழல் முறைகேடு அம்பலம்

லக்னோ, ஜூன் 26 பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் 4,000 எண்ணிக்கை யில் போலியாக சேர்த்து பள்ளி மாணவர் களுக்கு இலவச சீருடை, காலணி வழங் கியதாக நிதிமுறை கேடு செய்துள்ளது அம்பலமாகி யுள்ளது.

உத்தரப்பிரதேச அரசுப் பள்ளி களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக பல ஆண்டுகளாக புகார் உள்ளது. அம்மாநில அரசுப் பள்ளிகளில் ஊழல் முறைகேடுகள் தொடர்கின்றன. அண்மையில், மாநிலத்தின் பல பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணியாற் றுவதுபோல் கணக்குக் காட்டி பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடுத் தகவல் வெளி யானது.

தற்பொழுது அம்மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் ஆதார் அட்டையை சரி பார்த்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரப்பிரதேச அரசுப் பள்ளிக ளில் மாணவர்கள் குறைவு என்ப தால் அதன் சேர்க்கைக்குஎன உச்ச வரம்பு நிர்ணயிக்கப் படவில்லை. இதன்  விளைவாக பெரும் பாலான பள்ளிகளில் போலியாக மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசுப் இலவசமாக அளிக்கும் சீருடை, குளிருடை, காலுறை மற்றும் காலணி, புத்தகப் பை ஆகியவை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களால் வாங்கப்படுகின் றன. ஒரு மாணவனுக்கு ரூ.1,200 மதிப்பில் அம்மாணவர்களின் பெயரில்  பல கோடி ரூபாய் முறை கேடுகள் நடந்தது தெரியவந்து உள்ளது.

உத்தரப்பிரதேச அரசின் தொடக்க நிலைக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் அதன் ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய் யப்படுகிறார்கள். இதற்கு அஞ்சி, ஆசிரியர்கள் போலியாக மாணவர் கள் எண்ணிக்கையை அதிகரிக் கிறார்கள். இது கடந்த ஆட்சிகளில் உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆத ரவுடன் நடை பெற்றதால் அதை ஆளும் அரசுகள் கண்டு கொள்ள வில்லை’’ எனத் தெரிவிக்கின்றனர்.

இந்த ஊழல் முறைகேடுகுறித்த தகவல் வெளியான பின்னர், உத்த ரப்பிரதேச அரசு தொடக்கப் பள் ளிகள் இணையதளத்தில், லக்னோ மாவட்டத்தில் மட்டும் 22.95 லட்சம் என இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 15.8 லட்சம் எனக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த எல் லைக்கு உட்பட்ட குறிப்பிட்ட இரண்டு பள்ளிகளில் தான் 4,000 போலி மாணவர் சேர்க்கைகள் நடைபெற்றுள்ளன.

மீதமுள்ள பல பள்ளிகளில் போலி மாணவர் சேர்க்கை சில ஆயிரங்களாக உள்ளன. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கொண்ட இவை பிராத்மிக் (தொடக்கம்) பள்ளிகள் என்றழைக் கப்படு கின்றன.

இதுபோன்ற நிலையில், உத்த ரப்பிரதேச அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் சரியாக நடத்தப்படுவ தில்லை. ஆசிரியர்களும் அன்றா டம் பள்ளிக்கு வருவதில்லை. இதை தடுக்க, ஆசிரியர்களுக்கு செல்பி மூலம் மாநிலத் தலைமையகத்திற்கு வருகைப் பதிவு முறையை கொண்டு வந்தும் பலனில்லை.

இதுபோன்ற காரணங்களால் அரசுப் பள்ளி ளில் மாணவர்கள் சேர விரும்புவ தில்லை. இன்னும் பல மாவட்டங்களின் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கையும் சரிபார்க்கப் பட்டு வருகிறது. இதி லும் பல கோடி ஊழல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment