பூனைக்குட்டி வெளியில் வந்தது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

பூனைக்குட்டி வெளியில் வந்தது!

 செய்தியாளர் கேள்வி: சமீப காலமாக டில்லியில் இருந்து இந்தியாவை ஆளும் மத்திய அரசைஒன்றிய அரசு" என்று தமிழக ஆளும் கட்சியினர் அழைக்கத் துவங்கியுள்ளனர். ஆட்சித் தலைவர்களின் அலுவலக அறிக்கையிலும், ஒன்றிய அரசு என்று குறிப்பிடு கிறார்களே?

பதில்: அண்ணாதுரை கையில் திராவிட நாடு பிரிவினை முதலில் ஹிந்தி எதிர்ப்பு, பிறகு மாநில சுயாட்சி, அப்புறம் தனிக் கொடி என்றெல்லாம் மறு பிறப்பெடுத்து அல்பாயுசிலே முடிந்தது. இப்போது அதன் லேட்டஸ்ட் பிறப்பு ஒன்றிய அரசு. இதன் கதியும் அதே கதிதான்.

- ‘துக்ளக்', 23.6.2021 பக். 9

யூனியன்' அரசு என்பதைத் தமிழில் ஒன்றியம் என்று சொன்ன மாத்திரத்திலேயே அஞ்சுகிறதா? பார்ப்பன வயிறு எப்படி எப்படியெல்லாம் கொழுந்து விட்டு எரிகிறது பார்த்தீர்களா?

இவர்கள் சொல்லும் காரணங்களைப் பார்த்தால் "ஒன்றியம்" என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வு என்பதை மேலும் உயர்த்திப் பிடிக்கிறது.

பார்ப்பனர்களை இன்னும் நம்புகிறீர்களா?

No comments:

Post a Comment