மதுரை, ஜூன் 28-- மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆறு இடங் களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச் சர் பி.மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச் சர் முனைவர். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் 26.06.2021 அன்று பார்வையிட்டனர்.
அமைச்சர்கள் கூறுகையில், தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளன்று அண்ணா நூலகம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தைப் போன்று தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
நூலகம் அமைப்பதற்கு உத்தேசமாக தெரிவு செய்யப்பட்டுள்ள மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகில், உலகத் தமிழ்ச் சங்க வளாகம், சட்டக் கல்லூரி மாணவியர் விடுதி வளாகம், புட்டுத்தோப்பு சாலை பகுதி, எல்லீஸ் நகர் மீனாட்சி அம்மன் கோவில் தேவஸ் தான இடம், மற்றும் எல்லீஸ் நகர் வீட்டுவசதி வாரிய வளாகம் என ஆறு இடங்களை பார்வையிட்டுள்ளோம். குறிப்பாக கலைஞர் நூலகம் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முழு குளிர்சாதன வசதி யுடன் ஒரே நேரத்திலே 600 வாசகர்கள் அமர்ந்து படிக்கின்ற வகையில் மிக பிர மாண்டமாக அமையவுள்ளது. தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களிடம் பார் வையிட்ட ஆறு இடங்களின் நிலை குறித்து தெரிவித்து, அவர் தேர்ந்தெடுக் கும் இடத்தில் ஓர் ஆண்டுக்குள் ஏழு தளங்களை கொண்ட கட்டடமாக கலை ஞர் நூலகம் சிறப்பாக அமையவிருக்கிறது என்றனர்.
முன்னதாக பூங்கா முருகன் கோவி லில் அர்ச்சகர்களுக்கு ரூ.4000 மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பு அடங்கிய நிவாரண உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத் தினர்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அரசு கூடுதல் தலைமைச் செய லாளர் சந்தீப் சக்சேனா, மாவட்ட ஆட் சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள்கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), தமிழரசி ரவிக்குமார் (மானா மதுரை) உள் ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment