ஈரோடு, ஜூன் 28 ஈரோடு மண்டல திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் காணொலி காட்சி வழி யாக 25.06.2021 அன்று மாலை 04.30 மணிக்கு பெரியார் அறக்கட்டளை தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர். க.சண்முகம் தலைமையில் நடைபெற் றது.
மண்டல திராவிடர் கழக செயலாளர் கோபி.ராஜமாணிக்கம், மாவட்ட தலைவர்கள் கு.சிற்றரசு (ஈரோடு), இரா.சீனிவாசன் (கோபி), ஆ.குமார் (நாமக்கல்), மாவட்ட செயலாளர்கள், மா.மணிமாறன் (ஈரோடு), ந.சிவலிங்கம் (கோபி), வை.பெரியசாமி (நாமக்கல்), முன்னிலை வகித்தனர்.
மண்டல இளைஞ ரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை வரவேற்புரை நிகழ்தி னார்.
கூட்டத்தில் கோபி எழில், இராமலிங்கம், கி.பிரபு, குமாரபாளையம் நகர செயலாளர் சரவ ணன், நாமக்கல் மாவட்ட இளைஞரணி செயலா ளர் சு.சேகர், ஒரிச்சேரி தேவேந்திரன், ரா.மணி கண்டன், அசன் முகமது, ராஜசேகரன், கூடக்கரை டி.பாபு, வேலூர் பி.இளங் கோவன், நம்பியூர் சஞ்சய்குமார் பெரியார் வாசகர் வட்ட தலைவர் பி.என்.எம். பெரியசாமி, கோபி. குப்புசாமி, விஜய மங்கலம் மோகன் ராஜ், சசிதரன், கோபி. ப.வெற்றி வேல், மற்றும் பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகள் புஷ்பராஜ், சிவபாரதி, சூர்யா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிரியதர் ஷினி (என்ற) அன்பரசி, ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித் தார்கள்.
நிறைவாக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடுவது மற்றும் சுவரெழுத்து பிரச்சாரம், பெரியார் பண்ணையின் புதிய திரா விட நாற்றுகளை வழி நடத்துவது குறித்து கருத் துரை வழங்கி உரையாற் றினார்.
காணொலி கூட்டத்தில்
1). தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17க்கு முன்னதாக இப் போதே மண்டலம் முழு வதும் சுவரெழுத்து பிரச் சாரம் செய்வது.
2). தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடிக் கம்பங்கள் நட்டு மண்டலம் முழுவதும் கொடியேற்றுவது.
3). ஈரோடு மண்டல பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வகுப்பில் கலந்து கொண்ட மாணவ தோழர்களுக்கு கழக வெளியீடு சிறு புத்தகங் கள் துண்டு பிரசுரங்களை கொடுத்து அவர்கள் மூல மாக சக மாணவ தோழர் களை இயக்கத்தில் இணைய வைப்பது
4). ஜூலை 2ஆம் தேதி தனது 99ஆவது பிறந்த நாளை கொண்டாடும் பெரியார் அறக்கட்டளை தலை வரும் கழக காப்பா ளருமான பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் பிறந்த நாளை மிக சிறப் பாக கொண்டாடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ் நன்றி கூற ஈரோடு மண் டல திராவிடர் கழக காணொலி கலந்துரையா டல் கூட்டம் சிறப்பாக நிறைவுற்றது.
No comments:
Post a Comment