டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைக்கும் முயற்சியில் ராஷ்டிரிய மஞ்ச் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத் பவார் இன்று நடத்த உள்ளார்.
*
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வேலையின்மை அதிகரிப்பு என அனைத்திலும் தோல்விமுகத்தோடு
உள்ளது. இது பற்றி பிரதமர் மோடி எதுவும் பேசுவதில்லை என மூத்தப் பத்திரிகையாளர்
ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.
*
மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயா மீது ஒன்றிய அரசு நடத்தை விதிகள்படியான நடவடிக்கையை மீண்டும் துவக்கியுள்ளது.
டெக்கான்
கிரானிக்கல்,சென்னை:
*
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் எஸ்தர் டஃப்லோ, அரவிந்த் சுப்ரமணியன், ரகுராம் ராஜன், ஜூன் டிரெட்ஜ், எஸ். நாராயணன் உள்பட 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை தமிழ் நாடு அரசு அமைத்துள்ளது.
*
கரோனாவால் இறந்த குடும்பத்தினர்க்கு மோடி அரசு நிவாரணத் தொகையான ரூ.4 லட்சம் அளிக்க முடியாது என தெரிவித்த நிலையில்,
இது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (22.6.2021) அறிவிக்க உள்ளது.
*
திராவிட இயக்கச் சித்தாந்தத்தின் அடிப்படையில் தமிழ் நாடு அரசு செயல்படும் என ஆளுநர் உரையில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
*
கோயில் அர்ச்சகர்களாக பெண்களை நியமனம் செய்யும் முடிவில் தமிழ் நாட்டை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என மூத்த பத்திரிகையாளர்
பானு பிரதாப் மேத்தா குறிப்பிட்டுள்ளார்.
- குடந்தை
கருணா
No comments:
Post a Comment