தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 28, 2021

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள்

சென்னை, ஜூன் 28 தமிழ்நாடு அரசின் தளர்வுகளுடன் கூடிய ஊர டங்கு உத்தரவு இன்று (28-6-2021) முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள், வணிக அமைப்புகள் ஆகியோரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் கருத் துக்கள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு பின்வரும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. 

வகை 2 மாவட்டங்களில், துணிக் கடைகள், நகை கடைகள் காலை 

9 மணி முதல் மாலை 7 மணிவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்படி புதிய தளர்வுகளை அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment