சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வி திட்டம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 28, 2021

சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வி திட்டம் அறிவிப்பு

சென்னை, ஜூன் 28- சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2021-2022) இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகள்) சேர விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண் டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த படிப்பில் சேர இலவச கல்வி திட்ட விண்ணப்பத் தையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் 28-ஆம் தேதி (இன்று) முதல் பார்க்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment