- திராவிடர் கழகத் தலைவர் -
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
என்னை ஆளாக்கி இயக்கத்திற்கு ஆற்றுப் படுத்திய என் ஆசான் ஆ.திராவிடமணி அவர் களுக்கு நன்றி. வாழ்நாள் எல்லாம் தந்தை பெரியாருக்கு நான் மட்டுமல்ல, இந்த இனமே நன்றிக்கடன் பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்குமுன் எனக்கு இருதய அறு வைச் சிகிச்சை செய்தபோது அமெரிக்காவில் எனக்கு உற்ற துணைவராக இருந்த டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கு நன்றி!
என் வாழ்விணையர், குருதிக் குடும்பத்தினருக்கு நன்றி. அவர்கள் என் கால்களை இழுக்கவில்லை. என் பொதுவாழ்வுக்கு ஊக்கப்படுத்தினார் - மூக்கணாங்கயிறு போடவில்லை.
என் குடும்பமே கொள்கைக் குடும்பம் என்பதால், இயக்கப் பணிக்கு எந்த இடையூறும் இல்லை.
குருதிக் குடும்பத்தினரைவிட என் கொள்கை பெரும் குடும்பத்தினர் நாடெங்கும்! அவர்களின் ஒத்துழைப்புக்கும், பணிகளுக்கும் நன்றி! நன்றி!!
இயக்கத்திற்கு, இளைஞர்கள் ஏராளம் வந்து கொண்டு இருக்கிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது.
புரட்சிக்கவிஞர் பாடினார்,
''பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக்
கருதிய கருத்து வீரமணியை
வீண்செயல் எதிலும் வீழ்த்தவில்லை''
என்று பாடினார்.
பெரியாரைப் பின்பற்றியதால், அதே பணியை செய்து வருவதால் எனக்கு வேறு பழக்கங்கள் கிடையாது.
''துணிவு கொள்!
நன்றியை எதிர்பார்க்காதே!
பொதுத் தொண்டில் நல்ல பெயர் எடுக்க வேண் டும் என்று எதிர்பார்க்காதே!
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!'' என்று சொன்னவர் நமது அறிவு ஆசான்.
இவைதான் நமக்கான பாடங்களும், பயணங் களும்!
இந்த வாய்ப்பு வேறு யாருக்குக் கிடைக்கும்?
தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன் நான். ஒழுக்கம், நாணயம், நேர்மை, சொல்லும் செயலும் ஒன்றே என்ற நிலை என்பவைதான் பெரியார் தொண்டன் என்பதற்கான அடையாளம் - இலக்கணம்!
நம் எதிரிகள் நாணயமானவர்கள் அல்லர்; சூழ்ச் சிக்காரர்கள். பவுத்தத்தை அணைத்து அழிக்க வில்லையா?
எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெரியார் வெறும் படமல்ல - இலட்சியப் பயணம். எல்லோ ரையும் உயர்த்தும் ஏணி - கொண்டு சேர்க்கும் தோணி!
இறுதி மூச்சு அடங்கும்வரை எம் பணி பெரியார் பணி தொடரும்.
பெரியார் வைத்த நம்பிக்கைக்கு விசுவாசமாக அது இருக்கும்.
என்னை 'விடுதலை' ஆசிரியராக அறிவித்து 'விடுதலை' ஆசிரியரின் நாற்காலியில் அவரே அமர்த்தினாரே - அந்த வாய்ப்பும், தருணமும் யாருக்குக் கிடைக்கும்?
என் முதுமையிலிருந்து என்னை விடுதலை செய்து விட்டீர்கள் - இளமைப்பால் ஊட்டி விட்டீர்கள்.
நன்றி! நன்றி!! நன்றி!!! என்றார் தமிழர் தலைவர்.
தொடர்ந்து ஏராளமான வினாக்களுக்கு விரிவாக விடையளித்தார். (முழுமையாக வெளிவரும்).
திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை நன்றி கூறினார். இந்த அருமையான நிகழ்ச்சிக்கு நன்றி கூறும் வாய்ப்பு அளித்தமைக்கும் நன்றி கூறினார்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கருத்தரங்கை ஒருங் கிணைத்தார்.
மாநிலம் முழுவதுமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தோழர்கள் காணொலியில் பங்கு கொண்டது வெகு சிறப்பு!

No comments:
Post a Comment