தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

தகவல்

 மின் புகார்

மின் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் செய்ய விரும்புவோருக்கான தொலைப்பேசி எண்: 94987 84987.

சமத்துவ உரிமை

கேரளப் பள்ளிகளில் ஆண் - பெண் வேறுபாட்டை வளர்க்கும் வகையில் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள வரிகள் நீக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.

கோவிலுக்குச் சென்றோர் பலி!

.பி. கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் சிங் (வயது 38). இவரது மகனுக்குப் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு, குடும்பத்தோடு கார்மூலம் கோவிலுக்குச் சென்றனர். வழியில் பல்ராம்பூர் என்னும் இடத்தில் சாலையோர குளத்தில் கார் கவிழ்ந்ததால் குடும்பத்தினர் ஆறு பேரும் பரிதாப மரணம்!

மூன்றாம் அலை?

தடுப்பூசி போடப்பட்டு இருப்பதால், மூன்றாம் அலை தீவிரமாய் இருக்காது. - இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (அய்.சி.எம்.ஆர்.) தகவல்

இதுதான் கரோனா நெருக்கடி நிலை!

92% ஊதியமோ, நிவாரணமோ பெறவில்லை.

91% வேலையை இழந்துள்ளனர்.

மே 31 அன்று - 74% பேர் தங்கள் கைகளில் ரூ.200-க்கும் குறைவாகவே வைத்திருந்தனர்.

இதுதான் இந்தியா!

2020 இல் உலகம் முழுவதும் பொருளாதாரம் உயர்வு 7.4%. ஆனால், இந்தியப் பொருளாதாரமோ வீழ்ச்சி 4.4%

வேலை நிறுத்தம்!

பாதுகாப்புத் துறை தளவாட ஆயுதங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதால் 41 ஆண்டுகளாகப் பணியாற்றும் பணியாளர்கள் வேலை நிறுத்தம்.

ரத்து!

நேர்முகத் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க அனைத்துத் தேர்வுகளுக்கும் நேர்முகத் தேர்வு ரத்தாம், ஆந்திராவில்!

தலைமை நீதிபதி!

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை சிறப்பாக உள்ளது - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி கருத்து.

பழங்குடியினர்

உதகையில் பழங்குடிப் பெண்கள் நடத்தும் பெட்ரோல் நிலையம்.

கே.கே.வேணுகோபால்

ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு.

பிரியங்கா

பெட்ரோல், டீசலுக்கான வரியை 12 மடங்கு உயர்த்தி ரூ.400 கோடி ஈட்டியுள்ளது ஒன்றிய மோடி அரசு.

- பிரியங்கா காந்தி

No comments:

Post a Comment