யூனியன் எனில் ஒன்றியம் என்பதுகூடத் தெரியாதா?
* மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அறிவிப்பதன்மூலம் டாக்டர் அம்பேத்கரை அவமதித்துவிட்டது தி.மு.க.
- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்
>> யூனியன் மினிஸ்டர் (ஒன்றிய அமைச்சர்) என்று பா.ஜ.க.வினர் உள்பட ஊடகங்கள் சொல்லுவது எல்லாம் யாரை அவமதிக்கவாம்?
மாம்பழம் கசக்காது
* சர்க்கரை நோயாளிகளும் இனிமேல் மாம்பழம் சாப்பிடலாம் - ‘சுகர்' ஃபிரியாம் - கராச்சியைச் சேர்ந்த குலார் சர்வார் முயற்சி வெற்றி.
>> அறிவியலின் ஆசைக்கு அளவேயில்லை.
சொல்ல வேண்டிய இடம் எது?
* உலகிலேயே மிகவும் பழைமையான மொழி தமிழே - இது நமக்குப் பெருமை
- பிரமதர் மோடி.
>> இதனை சங்கரமடத்திலும், அர்ச்சகர்களிடத்திலும் சொல்லுங்கள் - தமிழ் நீஷப் பாஷையாம் - பூஜை வேளையில்
சங்கராச்சாரியார் இந்த ‘நீஷ' மொழியில் பேசமாட்டாராம்!
‘நோ அட்மிஷன்!'
* பிறந்த மண்ணை வணங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
>> ஆனால், பூரி ஜெகந்நாதன், அஜ்மீர் பிர்மா கோவில்களில் மட்டும் நேரில் சென்று வணங்க முடியாது குடியரசுத் தலைவரால்.
No comments:
Post a Comment