‘‘மாமியார் உடைத்தால் மண் சட்டி - மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

‘‘மாமியார் உடைத்தால் மண் சட்டி - மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?''

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் ‘‘ஒன்றிய அரசு'' என்று யூனியன் அரசை குறிப்பிட்டது குறித்து, காவிகளும், அவர்களைத் தூண்டிவிடும் குல்லுகப் பட்டரின் வாரிசுகளும், மனு குல மைந்தர்களும்ஆகா ஓகோ' எனக் கூச்சல் கிளப்பி, தங்களது 24 கேரட் தேசப் பக்தியை (‘‘சுதந்தரப் போராட்டத்தில் இவர்களின் மூத்த தலைவர்கள் பங்கென்ன என்பது உலகறிந்த வரலாறு!) வெளிச்சம் போட்டு, வீண் வம்பு செய்ய முனைந்த நிலையில்,

பதவியேற்பு விழாவில் புதுச்சேரி ஆளுநரும் ஒன்றியம் என்றுதானே படித்தார்; பா... அமைச்சர்கள் அத்துணைப் பேரும் ஒன்றிய அரசு என்றே கூறி, பதவிப் பிரமாணம் எடுத்தார்களே, அவர்களும் தேச விரோதிகள்தானா? பிளவு - பிரிவினை சக்திகள்தானா?

அட அறியாமையின் அகம்பாவங்களே, உங்கள் அமைச்சர்கள் சொன்னால் தேச பக்தி, ‘‘திராவிட'' முதலமைச்சர் சொன்னால் மட்டும், தேச விரோதக் குரலா?

வெட்கமாக இல்லையா?

இனியாவது இப்படி ‘‘மூக்கு உடைபடா''தீர்கள்!

No comments:

Post a Comment