தமிழர்
தலைவர் வழிகாட்டுதல் உரைதருமபுரி, ஜூன் 21- தர்மபுரி சேலம் ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா 20.06.2021காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. பெரியார் மணியம்மை அறிவியல் நிகர்நிலைப் பல்கலைக்கழ கத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் தருமபுரி, சேலம், ஈரோடு மண்டலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா நேற்று (20.6.2021) காலை 10.30 மணிக்கு மாநில அமைப்பு செயலாளர் தர்மபுரி ஊமை ஜெயராமன் தலைமை யில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில
அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம் அனைவரையும் வர வேற்றார். தொடர்ந்து
மாநில அமைப் புச் செயலாளர் தர்மபுரி ஊமை ஜெய ராமன் தலைமை உரையாற்றினார். நிகழ்வில் மூன்று மண்டலத்திற்கு உட் பட்ட மாநில பொறுப்பாளர்கள் சார் பில் உரத்தநாடு இரா.குணசேகரன் உரையாற்றினார். தொடர்ந்து ஒருங் கிணைப்பாளர்கள் தர்மபுரி பழ. பிரபு, சேலம் பா. வைரம், ஈரோடு ஜெபராஜ் செல்லதுரை ஆகியோர் அறிக்கை வாசித்தார்கள்.
பயிற்சி
பெற்ற மாணவர்களின் சார்பாக மூன்று மண்டலங்களின் சார் பாக தர்மபுரி மங்கையர் அரசி , சேலம் தமிழ்மதி, ஈரோடு பிரியதர்ஷினி ஆகிய மாணவர்கள் பயிற்சி முகாம் தொடர் பான தங்கள் கருத்தினை மிக ஆழமாக எடுத்துக் கூறினார்கள்.
மூன்று
மண்டலம் சார்பில் சேலம் மண்டல தலைவர் கவிஞர் சி. சுப்பிர மணியன், தருமபுரி சார்பில் அண்ணா சரவணன், ஈரோடு மண்டல செயலாளர் இராசமாணிக்கம் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட கழக சார்பில் தருமபுரி மாவட்ட தலைவர் வீ. சிவாஜி, ஆத்தூர் மாவட்ட தலைவர் த. வானவில், ஈரோடு
மாவட்ட தலைவர் கு. சிற்றரசு ஆகியோர் மாண வர்களுக்கு வாழ்த்துரை வழங்கி பெரியாரியல் கொள்கைக்கு வருக வருக என அன்புடன் வரவேற்றார்கள்.
பெரியார்
சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் நம். சீனிவாசன் அறிமுக உரையாற்றினார். பெரியார் மணி யம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ்
தொடக்க உரையாற்றினார். கழ கத் துணைத்
தலைவர் கவிஞர் கலி. பூங் குன்றன் மாணவர்களைப் பாராட்டி உரையாற்றினார்.
நிறைவாக
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந் தர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.
நிறைவு
விழா காணொலியில் இறு தியாக மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் ஆத்தூர் தமிழ் பிரபாகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
மாநில
மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். காணொலி நிகழ் வில் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத் தனூர் சண்முகம், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு
பெரியார், மாநில இளைஞரணி செய லாளர் த.சீ. இளந்திரையன்,
புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி, பொதுக் குழு உறுப்பினர் பழனி. புள்ளையண் ணன், தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மூன்று மண்டலங்களில் உள்ள மாநில மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள் தோழர் கள் மற்றும் தமிழகமெங்கும் உள்ள கழ கப் பொறுப்பாளர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தர்மபுரி மண்டல பெரியாரியல் வகுப்பு தொடங்கும் முன் மாணவர்கள் ஒவ்வெரு நாளும் ஒருவர் கடவுள் மறுப்பு கொள்கை வரிகளை பிழையின்றி சொன்னவர்கள் பெயர் பட்டியல்:
சத்தியமூர்த்தி, ப்ரீத்திகா, சிறீதேவிகா, சீனுவாசன், சந்தியா, நாத்திகன், சந்தோஷ்,
சித்தாந்தன், மங்கையர் அரசி, சமரசம், தருண், நட்சத்ரா
இவர்கள் அனைவரையும் பாராட்டி தர்மபுரி மண்டல கழக செயலாளர் பழ.பிரபு அவர்கள் உடனடியாக அவர்கள் வங்கி கணக்கிற்கு ரூ.100 அனுப்பி உற்சாகப்படுத்தினார்.

No comments:
Post a Comment