டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*
ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருப்பதால் மத்திய அரசை குறிப்பிட 'ஒன்றியம்' என்ற சொல்லைத்தான் இனி பயன்படுத்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் திட்ட வட்டமாக தெரிவித்தார்.
டெக்கான்
கிரானிக்கல், அய்தராபாத்:
*
தற்போது மோடி அரசு உருவாக்கும் புதிய நாடாளுமன்ற வளாகம், குடியரசுத் தலைவர் தலைமையிலான அரசு உருவாக்கிட வழிவகுக்கும். இது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் கருத்தியலால் உருவாக்கப் பட்ட இந்தியாவின் முடிவின் தொடக்கமாக இருக்கும் என பொருளாதார ஆய்வாளர்
மோகன் குருசாமி கூறியுள்ளார்.
*
2019-2020இல் பாஜக ரூ.276.45 கோடி நன்கொடையைப் பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடைகளில் 76.17 சதவீதம் என ஜனநாயக சீர்திருத்தத்திற்கான
அமைப்பு தெரிவித்துள்ளது.
தி
இந்து:
*
அரசமைப்பு நிர்ணயசபை அதிகாரத்தை மய்யப்படுத்த விரும்பாததால் மத்திய என்ற சொல் அரசமைப்பில் இல்லை என உச்ச நீதிமன்ற
மூத்த வழக்குரைஞர் முகுந்த் உன்னி கூறியுள்ளார்.
- குடந்தை
கருணா
No comments:
Post a Comment