சிவகங்கை மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு நன்கொடை மற்றும் பரிசுகள் விவரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 24, 2021

சிவகங்கை மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு நன்கொடை மற்றும் பரிசுகள் விவரம்

காணொலி வாயிலாக நடந்த பயிற்சி வகுப்பு செலவுக்கு நன்கொடை ரூ.2000/-மண்டல செயலாளர் .மகேந்திர ராசன்  வழங்கினார்.

முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் மூன்றாம் பரிசு ரூ 2000/-தி.பெரியார் சாக்ரடீஸ் நினைவாக மண்டல தலைவர் சாமி திராவிடமணி வழங்குகிறார்.

அடுத்த வெற்றி பெறும் 5 மாணவர்களுக்கு தி.பெரியார் சாக்ரடீஸ் பிறந்தநாள் நினைவாக " பெரியார் பிஞ்சு" மாத இதழ் ஓராண்டு சந்தாவினை வழங்குவோர் ஜெ.இங்கர்சால் மற்றும் .பெ.தமிழீழம் ஆகியோர்.

தேர்வில் பங்கேற்கும் மற்ற மாணவர்கள் அனைவருக்கும் தி.பெரியார் சாக்ரடீஸ் நினைவுநாளை யொட்டி "புத்தர்" படக்கதை புத்தகம் வழங்குவோர் பா.ஜெயராமன்- தமிழரசி,  மேனாள் இராமநாதபுரம் மாவட்ட தலைவர்.

No comments:

Post a Comment