வேலூர், ஜூன் 29- வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மண்டல கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் காணொலி வாயிலாக 18.06.2021 அன்று மாலை 3.00 முதல் 4.30 மணி வரை வெகு சிறப்பாக நடை பெற்றது.
இக்காணொலி கூட்டத் திற்கு கழக துணைப்பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி
தலைமை வகித்தார். மாநில மகளிரணி அமைப்பாளர் ந.தேன்மொழி வரவேற்புரை நல்கினார். மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை தொடக்கவுரை ஆற்றினார். மாநில மகளிரணி செயலா ளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி பொரு ளாளர் எ.அகிலா, மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் சே.மெ.மதிவதனி நோக்க உரையாற்றினர்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் வேலூர், திருப் பத்தூர், செங்கல்பட்டு, திரு வள்ளுர், இராணிப்பேட்டை மாவட்ட மகளிரணி, மக ளிர் பாசறை, தலைவர்கள், செயலாளர்கள்,
முன்னிலை வகித்தனர். மேலும் புதிய தாக பல மகளிரும், மற்றும் கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தமிழர் தலைவரின் அறி வுரைப்படி இக்கூட்டத்தின் வாயிலாக கழகப் பெண் மணிகள் அனைவரிடமும் உடல் நலம், மனநலம், குடும்ப நலம் விசாரிக்கப் பட்டது. மேலும், ‘விடுதலை' இதழை வாட்ஸ் ஆப் மூலம் 'றிஞிதி' வடிவத்தில் அனுப்பு தல், விடுபட்ட மாவட்டம் மற்றும் மண்டலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்தல் குறித்து தமிழர் தலைவரின் அறிவுரைப்படி வேலூர் மண்டல மகளிரணி செயலாளராக ச.ஈஸ்வரி, வேலூர் மாவட்ட மகளி ரணி தலைவராக ச.கலை மணி, வேலூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாள ராக சு.வசுமதி- - புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தின் வாயிலாக தேர்தலுக்கு முன்பு புரட்சியாளர்கள் சிலைக்கு போடப்பட்ட கூண்டினை அகற்றும்படி மகளிர் சார் பில் தமிழர் தலைவர் வழி யாக கோரிக்கை வைப்பது என்று தீர்மானம் செய்யப் பட்டது. இக்காணொலிக் கூட்டம்
நன்றி உரையுடன் நிறைவுபெற்றது.

No comments:
Post a Comment