எம்.ஜி.ஆர். தலைமையில் தந்தைபெரியார் நடத்திவைத்த சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

எம்.ஜி.ஆர். தலைமையில் தந்தைபெரியார் நடத்திவைத்த சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணம்

இந்த நாளின் வரலாறு

தமிழ்நாடு மேனாள் முதல் அமைச்சர் எம்.ஜி.இராமச் சந்திரன் தலைமையில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீர சைவ சமூகத்தை சேர்ந்த .கே.ரகுபதிக்கும் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றஜாதி மறுப்பு திருமணத்தைபகுத்தறிவுத் தந்தை பெரியார் நடத்தி வைத்த நாள் 28.6.1970.

ஜாதி மறுப்பு திருமணத்திற்குத்  தலைமை தாங்கிப் பேசிய எம்.ஜி.இராமச்சந்திரன், "இந்த மணவிழா அறிஞர் அண்ணா தலைமை தாங்கி   அய்யா நடத்தி வைக்க வேண்டிய திருமணம் ஆகும். ஆனால் அறிஞர் அண்ணாவின் வாழ்த்து இம்மண மக்களுக்கு என்றும் இருக்கும். எவ்வளவுதான் சட்டம் கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால் தான் அது பயன்படும்.

அய்யா அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியைத் துவக்கிய காலம் பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ்நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலை யில் உள்ளார்கள். சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத் தான் ஜாதி புகுத்தப்பட்டது. ஆதிக்கக்காரர்கள் எதிர்ப் பைச் சமாளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக் கின்றார்.  உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத்துவது என்பது பெருஞ்சாதனை ஆகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க் கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம்.

இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்கு தக்க அடை யாளமாகத் திகழ்கின்றார்கள். அய்யா அவர்களது தியாகத் திற்குத் தலை வணங்குவது தான் மரியாதை செலுத்துவது தான் இத்தகைய விழாவில் நம் கடமை ஆகும்" என்றார்!!

- சங்கரன்கோவில் அருணகிரி முகநூல் பதிவிலிலிருந்து

தகவல்: கோ.கருணாநிதி

No comments:

Post a Comment