சென்னை,ஜூன்25- தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று (25.6.2021) மாலை 6 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள் தமிழ்நாட்டில் தொடங்க முன்னுரிமை அளிப்பதுடன், அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோன்று, தமிழ்நாடு அரசு ஜூலை மாதம் 2021-_2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதில் இடம்பெறும் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்தும், நடந்து முடிந்த ஆளுநர் உரையில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவது, தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

No comments:
Post a Comment