புயல் மற்றும் அவசரகால இடர்களுக்கு உதவ, மீனவர்களுக்கான புதிய தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

புயல் மற்றும் அவசரகால இடர்களுக்கு உதவ, மீனவர்களுக்கான புதிய தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகம்!

சென்னை, ஜூன் 25 வாழ்வாதாரத்துக்காக, நாள்தோறும் கடலில் போராடும் மீனவர்களுக்கு, திடீரென ஏற்படும் ஆபத்துகளின்போது, தங்களது உயிரைக் காக்கும்படி கரையில் இருப்போருக்கு கோரிக்கை அனுப்பும், நம்பகமான, செலவு குறைந்த புதிய தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-லின் செயற்கைக் கோள் தரைக் கட்டுப்பாட்டு கட்டமைப்பைப் பயன்படுத்தி இயந்திரங்களை இணையத் தொடர்பு மூலம் இணைக்க வைக்கும் உத்தியைக் கொண்டு இத்தீர்வினை உருவாக்கியுள்ளது, ஸ்கைலோ டெக்னாலஜீஸ் (Skylo Technologies) என்ற இந்திய நிறுவனம்இதில் இருவழி தகவல் தொடர்பும் சாத்தியமாவதுடன், இதைச் செயலாக்குவதும் எளிது. இதற்காக இந்நிறுவனம் வடிவமைத்துள்ளஸ்கைலோ ஹப் (Skylo Hub)’ என்ற கச்சிதமான வடிவ சாதனத்தை மீனவர்களின் படகில் நிறுவினால் போதுமானது. இதன் இயக்கத்துக்குத் தேவையான மின்சாரத்தை பேட்டரிகளின் மூலமே வழங்கலாம். இதிலிருக்கும் நுண்ணலை கதிர் உணர்வு சாதனம் மீனவர்கள் அனுப்பும் தகவல்களை கரைக்கு எடுத்துச் செல்வதோடு, தரைக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து படகுக்கு அனுப்பப்படும் அவசரத் தகவல்களையும் மீனவர்களுக்கு கொண்டு சேர்க்கும் திறன் பெற்றுள்ளது என இந்நிறுவன இயக்குநர் கணேஷ் நாக்காவா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment